வளர்ச்சிக்கு தேவையான துத்தநாக சத்து அதிகமானால் உடல் என்ன ஆகும்?

Zinc In Your Food: கனிமச்சத்துக்களில் முக்கியமான ஒன்று துத்தநாகம். இது ஒருவரின்  உடலுக்கு சிறிய அளவு மட்டுமே தேவைப்படுகிறது, ஆனால், அது நமது ஆரோக்கியத்திற்கு அவசியமானது. முக்கிய இரசாயன எதிர்வினைகளை மேற்கொள்ள கிட்டத்தட்ட 100 நொதிகளுக்கு, துத்தநாக சத்து அவசியம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 15, 2022, 09:24 PM IST
  • கனிமச்சத்துக்களில் முக்கியமான ஒன்று துத்தநாகம்.
  • இது ஒருவரின் உடலுக்கு சிறிய அளவு மட்டுமே தேவைப்படுகிறது
  • ஆனால், அது நமது ஆரோக்கியத்திற்கு அவசியமானது
வளர்ச்சிக்கு தேவையான துத்தநாக சத்து அதிகமானால் உடல் என்ன ஆகும்? title=

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான உணவுகளை உண்பது மருத்துவரை நம்மிடம் இருந்து தொலைவில் வைக்கும். நாம் தினசரி உண்ணும் உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்களே, நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படையாகும். உடல் நலனை பேணி காக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் என பல்வேறு ஊட்டச்சத்துக்களும் நமது பசியாற்றும் உணவிலேயே இருக்கிறது. பசி என்பது என்ன? உடலுக்கு ஆற்றல் தேவைப்படும்போது ஏற்படும் உணர்வு தானே? பசியை ஆற்றும் உணவே, நாம் செயல்படுவதற்கான ஆற்றலையையும், ஆற்றலை வழங்கும் உறுப்புகளையும் இயங்கவும், சீரமைக்கவும் அடிப்படையாக இருக்கிறது.

கனிமச்சத்துக்களில் முக்கியமான ஒன்று துத்தநாகம். இது ஒருவரின்  உடலுக்கு சிறிய அளவு மட்டுமே தேவைப்படுகிறது, ஆனால், அது நமது ஆரோக்கியத்திற்கு அவசியமானது  முக்கிய இரசாயன எதிர்வினைகளை மேற்கொள்ள கிட்டத்தட்ட 100 நொதிகளுக்கு, துத்தநாக சத்து அவசியம். 

டிஎன்ஏ உருவாக்கம், செல்கள் வளர்ச்சி, புரதங்களை உருவாக்குதல், சேதமடைந்த திசுக்களை குணப்படுத்துதல் மற்றும் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதில் துத்தநாக சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. செல்கள் வளரவும், பெருக்கவும் உதவுவதால், வளர்ச்சியின் போது போதுமான அளவு துத்தநாகம் தேவைப்படுகிறது.

மேலும் படிக்க | ஆண்களே அலர்ட்! ‘இதை’ சாப்பிட்டா விந்தணுக்களின் தரம் மேம்படும்

துத்தநாகம் சுவை மற்றும் வாசனை உணர்வுகளுடன் தொடர்புடையது. குழந்தைப் பருவம், இளமைப் பருவம் மற்றும் கர்ப்ப காலத்தில் துத்தநாகச் சத்து குறைபாடு ஏற்பட்டால், அது வளர்ச்சியை குன்றச் செய்யும்.  
ஒருவர் எந்த அளவு துத்தநாக சத்தை எடுத்துக் கொண்டால் போதுமானது என்பது தெரியுமா?

19 வயதுக்கு அதிகமானவர்களில் ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 11 மி.கி மற்றும் பெண்களுக்கு 8 மி.கி என்ற அளவில் துத்தநாகச் சத்து போதுமானது. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் முறையே 11 மி.கி மற்றும் 12 மி.கி என்ற அளவில் துத்தநாகச் சத்து தேவைப்படுகிறது.

தினசரி 40 மி.கிராமுக்கு அதிகமான துத்தநாகத்தை உட்கொள்வது ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, அளவுக்கு மிஞ்சினால் ஆரோக்கியத்திற்கு ஆபத்து என்ற சொற்றொடர் துத்தநாக சத்துக்கு பொருந்தக்கூடியது ஆகும். 

இறைச்சி, கோழி மற்றும் கடல் உணவுகளில் துத்தநாகம் நிறைந்துள்ளது. பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற சில தாவர உணவுகளிலும் துத்தநாகம் உள்ளது. ஆனால் அவை கனிமத்துடன் பிணைக்கக்கூடிய பைட்டேட்டுகளையும் கொண்டுள்ளது, அதன் உறிஞ்சுதலைக் குறைக்கிறது.

மேலும் படிக்க | சர்க்கரை நோயை குணப்படுத்த முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மட்டி, சிப்பிகள், நண்டு, இரால், மாட்டிறைச்சி, கோழி, பன்றி இறைச்சி, பருப்பு வகைகள், கொட்டைகள், விதைகள், முழு தானியங்கள், செறிவூட்டப்பட்ட உணவு தானியங்கள் இவற்றில் துத்தநாகம் அதிகமாக உள்ளது. 

துத்தநாகம் மாத்திரைகள் மற்றும் துத்தநாகம் செறிவூட்டப்பட்ட உணவுகளும் கிடைக்கின்றன. ஆனால், அதிகப்படியான துத்தநாகம் உடலில் சேர்வது, இரும்பு மற்றும் தாமிரத்தை உறிஞ்சுவதில் தடை ஏற்படுத்தும். அதேபோல, உணவில் அதிகம் துத்தநாகம் சேர்ந்தால், குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படலாம்.

எனவே, உணவில் துத்தநாகம் குறைவாக உள்ள உணவுகள் அல்லது துத்தநாகக் குறைபாடு இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்து பரிந்துரைத்தால் தவிர, கூடுதல் துத்தநாகத்தை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது அவசியமானது.  இல்லாவிட்டால் நமக்கு நாமே ஆரோக்கியத்தை சீர்குலைத்துக் கொள்வோம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News