இந்த அறிகுறிகள் இருக்கா? நீங்க நீரிழிவு நோயாளியா? உடனே டாக்டரை பாருங்க
Diabetes: நீரிழிவு நோயால் இதயம் தொடர்பான பல பிரச்சினைகள் தொடங்குகின்றன. இது கண்களின் நரம்புகளில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நீரிழிவு நோயாளிகளின் பிரச்சனைகள்: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக, அனைத்து வயதினரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு நோயால், இன்னும் பல நோய்களும் எளிதில் உடலில் நுழைகின்றன. உலகில் சுமார் 42.2 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பின் அறிக்கை தெரிவிக்கின்றது. நீரிழிவு நோயால் ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சம் பேர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உயிரிழக்கிறார்கள் என்பது சோகமான ஒரு உண்மையாகும்.
நீரிழிவு நோயால் இதயம் தொடர்பான பல பிரச்சினைகள் தொடங்குகின்றன. இது கண்களின் நரம்புகளில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீரிழிவு நோய் சிறுநீரக செயலிழப்பையும் ஏற்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. நீரிழிவு நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் குளிர்காலத்தில் பாதங்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். கால் மரத்துப் போவதை 'டயாபடிக் நியூரோபதி' என்று பொதுவாக கூறுவதுண்டு.
நீரிழிவு நரம்பியல் நோயின் அறிகுறிகள் என்ன?
நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, அதன் விளைவு பாதங்களில் தோன்றத் தொடங்குகிறது. இதன் காரணமாக, நீரிழிவு நோயாளிகள் சிலருக்கு நரம்பு பாதிப்பு ஏற்படத் தொடங்குகிறது. அதன் அறிகுறிகள் கால்களில் தோன்றத் தொடங்கும். கால்களின் நடுக்கம், உணர்வின்மை மற்றும் வலி போன்றவை பொதுவான அறிகுறிகளாகும்.
சிலருக்கு இந்த அறிகுறிகள் தென்படுவதில்லை. எனினும், அவர்களின் நரம்புகள் சேதமடையும் போது, பாதங்களில் வலி, வெப்பம் அல்லது குளிர்ச்சியின் தாக்கம் இருக்கும். சர்க்கரை நோயாளிகள் குளிர்காலத்தில் அதிக பிரச்சனைகளை சந்திக்க ஆரம்பிக்கிறார்கள்.
மேலும் படிக்க | இந்த குளிர்காலத்தில் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க டிப்ஸ்!
குளிர்காலத்தில் கால் சம்பந்தமான பிரச்சனைகளை தவிர்க்க எப்போதும் மருத்துவருடன் தொடர்பில் இருங்கள். ஏனெனில் சர்க்கரை எவ்வளவு கட்டுப்பாட்டில் இருக்கிறதோ, அந்த அளவுக்கு உங்கள் பாதங்களில் ஏற்படும் பிரச்சனைகளும் கட்டுக்குள் இருக்கும்.
கால்களை பரிசோதிக்கவும்
நீரிழிவு நோயாளிகள் தங்கள் கால்களை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். பாதங்களில் ஏதேனும் சிவத்தல், வீக்கம், கொப்புளங்கள் போன்றவற்றைக் கண்டால், உடனடியாக சிகிச்சை பெறவும்.
தினமும் பாதங்களை சுத்தம் செய்யுங்கள்
தினமும் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை சுத்தம் செய்யுங்கள். எனினும், உங்கள் கால்களை நீண்ட நேரம் ஈரமாக வைத்திருப்பது சரியல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பாதங்களை நன்கு உலர வைக்கவும். உங்கள் கால்களில் லோஷனைப் பயன்படுத்துங்கள்.
எப்போதும் காலணி அணியுங்கள்
குளிர்காலத்தில் வீட்டை விட்டு வெளியே செல்லும் போதெல்லாம், காலணிகள் அல்லது செருப்புகளை அணிந்து கொண்டு வெளியே செல்லுங்கள். இப்படி செய்வதன் மூலம் பாதங்களை எப்போதும் காயத்திலிருந்து பாதுகாக்க முடியும். எந்த வகையான காயத்தையும் தவிர்க்க, வீட்டிலும் எப்போதும் சாக்ஸ் அணிவது நல்லது.
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளை கவசமாய் காக்கும் வெந்தயக்கீரை: எக்கச்சக்க நன்மைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ