குளிர்காலத்தில் மாரடைப்புக்கான சாத்தியங்கள் மிக அதிகம்: தவிர்ப்பது எப்படி?

குளிர் காலத்தில், காய்ச்சல் வந்தால், காய்ச்சல் வந்த ஒரு வாரத்திற்குள் மாரடைப்பு ஆபத்து 6 மடங்கு அதிகரிக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 25, 2021, 12:13 PM IST
குளிர்காலத்தில் மாரடைப்புக்கான சாத்தியங்கள் மிக அதிகம்: தவிர்ப்பது எப்படி? title=

Heart Attack: குளிர் காலங்களில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் கோடை காலத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். ஒரு ஆராய்ச்சியின் படி, குளிர் காலத்தில், காய்ச்சல் வந்தால், காய்ச்சல் வந்த ஒரு வாரத்திற்குள் மாரடைப்பு ஆபத்து 6 மடங்கு அதிகரிக்கும். ஆகையால், இதய நோயாளிகள் இந்த காலத்தில் தங்களது ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 

இருதய அமைப்புக்கு சேதம்
நிபுணர்களின் கூற்றுப்படி, மோசமான வாழ்க்கை முறை இருதய அமைப்பை சேதப்படுத்துகிறது. குளிர்காலத்தில் (Winters) மாரடைப்பு அதிகமாகும் சாத்தியக்கூறுகள் உள்ளன. குளிர்காலத்தில் காய்ச்சல் வரும்போது, ​​​​நமது இதயம் மன அழுத்தத்திற்கு ஆளாகிறது. இது மாரடைப்புக்கு வழிவகுக்கிறது என்று ஒரு ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மாரடைப்புக்கான ஆபத்து

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சுவாச நோய்த்தொற்றுகள், குறிப்பாக இன்ஃப்ளூயன்ஸா மற்றும் மாரடைப்பு ஆகியவற்றுக்கு இடையே குறிப்பிடத்தக்க தொடர்பைக் கண்டறிந்துள்ளது. Express.Co.Uk இன் அறிக்கையின்படி, காய்ச்சல் வந்த ஒரு வாரத்திற்குள் மாரடைப்பு ஆபத்து ஆறு மடங்கு அதிகரிக்கும். இன்ஃப்ளூயன்ஸா இதயம் மற்றும் வாஸ்குலர் அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

மாரடைப்பு (Heart Attack) நிகழ்வுகள் குளிர்காலத்தில் அதிகம் காணப்படுகின்றன. தமனிகள் ஏற்கனவே சுருங்கி இருக்கும் நபர்களில் இந்த நிலை மிகவும் பொதுவானது. மாரடைப்பு பெரும்பாலும் வெப்பநிலை குறைவாக இருக்கும் அதிகாலைப் பொழுதில் ஏற்படும்.

ALSO READ | Weight Loss: உடல் பருமனை குறைக்கும் ‘3’ மேஜிக் பானங்கள்...!

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, உடலில் ஏதேனும் தொற்று ஏற்பட்டால், இரத்தத்தை பம்ப் செய்ய இதயத்தின் தேவை அதிகமாகிறது. எனவே இதயத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இது தவிர, கடுமையான காய்ச்சலால் உடலில் உருவாகும் குறைந்த ஆக்ஸிஜன் அளவு ஒழுங்கற்ற இதயத் துடிப்பைத் தூண்டும். இரத்த அழுத்தம் குறைவது மயோகார்டியல் இஸ்கெமியாவுக்கு வழிவகுக்கும்.

காலையில் எழுந்ததும் கண்களுக்குக் கீழும், இமைகளுக்குக் கீழும் வீக்கம் தெரிகிறதா? இந்த வைத்தியங்கள் உங்களுக்கு உதவும் 

குளிர் காலத்தில் உடலால் செய்யும் ஃபிசிக்கல் நடவடிக்கைகளும் உடல் உழைப்பும் குறைவதாலும், தவறான உணவுப் பழக்கம் (Food Habits), வைரஸ் தொற்று போன்றவற்றாலும் மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது. ஆகையால், போதுமான உடல் உழைப்பை உறுதி செய்ய வேண்டும். சத்தான, சூடான உணவை உட்கொள்ள வேண்டும். வைரஸ் தொற்றுக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்ருவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | கொத்தமல்லி இலையில இவ்ளோ சத்து உள்ளதா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News