Diabetic Cure: சர்க்கரை நோய்க்கு வரப்பிரசாதமாகும் சஞ்சீவனி ‘இலைகள்’
இந்த 4 இலைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம், மென்று சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்
Blood Sugar Level Maintenance: நீரிழிவு நோய் என்பது மிகவும் சிக்கலான நோயாகும், ஒரு முறை ஏற்பட்டால், வாழ்நாள் முழுவதும் தொடரும் என்ற அபாயம் உண்டு. இதுவரை நீரிழிவுக்கான தீர்வாக எந்தவொரு மருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. நீரிழிவுக்கு என தற்போது கிடைக்கும் அனைத்துமே, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவே உதவுகின்றன. நீரிழிவு நோய் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தாமல் இருக்க பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொள்வது அவசியம் ஆகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சிறப்பான ஆனால் எளிதாக கிடைக்கக்கூடிய இலைகள் இவை.
சில இலைகளை மென்று சாப்பிட்டாலோ அல்லது வேறு எந்த வகையிலாவது உட்கொண்டாலோ, சர்க்கரை நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பெருமளவு குறைக்கலாம், அவற்றில் பயனுள்ள சில இலைகள் இவை...
கறிவேப்பிலை
கறிவேப்பிலை பொதுவாக தென்னிந்திய உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் அவை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளது. இது இன்சுலின் உணர்திறனை பாதிக்கிறது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும், கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறிப்பாக அதிலுள்ள இரும்புச்சத்து ரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது.
மேலும் படிக்க | மீண்டும் கொரோனொ பாதிப்பு! குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனரா? அதிகரிக்கும் கவலை
வெந்தயக்கீரை
உண்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும் வெந்தயக்கீரை, உணவில் ஊட்டச்சத்தை அதிகரிப்பதுடன், சுவையையும் தருவது ஆகும். நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் மட்டுமல்ல, வெந்தயக்கீரையும் நல்லது என்பது பலருக்கு தெரியாது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும் பண்பைக் கொண்டது வெந்தயக் கீரை.
மாவிலைகள்
மாம்பழத்தின் சுவையால் ஈர்க்கப்பட்டவர்கள், நீரிழிவால் பாதிக்கப்பட்டால், அந்த பழத்தை உண்பதை தவிர்ப்பார்கள். ஆனால் அதன் இலைகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மாவிலைகளில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பெக்டின் ஆகியவை உள்ளன. இவை, சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். மாவிலையை நன்றாக கழுவிய பின் மென்று சாப்பிடலாம் அல்லது இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.
வேப்பிலை
வேப்பிலை மிகவும் கசப்பானது என்றாலும், சிறந்த ஆயுர்வேத மருந்து ஆகும். வேப்பிலையின் நன்மைகளை யாரும் மறுக்க முடியாது. இந்த இலைகளில் ஃபிளாவனாய்டுகளுடன், வைரஸ் எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன, இது நீரிழிவு நோயின் விளைவைக் குறைக்கிறது. சிலர் அதை மென்று சாப்பிடுவார்கள் அல்லது இலைகளை உலர்த்தி, அரைத்து பொடி வடிவில் மாற்றி வைத்துக் கொண்டு தண்ணீரில் கலந்து குடிப்பார்கள்.
வேப்பிலை, மாவிலை, வெந்தயக்கீரை, கறிவேப்பிலை என இந்த 4 கீரைகளும் நீரிழிவை கட்டுப்படுத்துவதோடு, பிற ஊட்டச்சத்துகளையும் கொடுத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பைல்ஸ் பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளுக்கு 'நோ' சொல்லிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ