சர்க்கரை நோய்க்கான உணவுக் குறிப்புகள்: நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இருக்கும் பிரச்சனைகளில் அவர்கள் உட்கொள்ளும் உணவு ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. சர்க்கரை நோய் பிரச்னை அதிகரித்தால், அதுவே பல நோய்களுக்குக் காரணமாகிவிடும். நீரிழிவு நோயில், சர்க்கரை அளவை ஒவ்வொரு கணமும் கவனித்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் அடிக்கடி அதை பரிசோதிக்க வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள், தவறான உணவுகளை உட்கொண்டால், அவர்களது பிரச்சனை மேலும் அதிகரிக்கும். மருந்துகளை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயை சிறிது கட்டுப்படுத்தலாம். எனினும், சரியான உணவுமுறை மூலம் சர்க்கரையின் அளவை எளிதில் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். தினசரி உணவில் சில ஆரோக்கியமான விஷயங்களைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெந்தயம்
நீரிழிவு நோய்க்கு வெந்தய விதைகள் அதிக அளவில் நன்மை பயக்கும். வெந்தயத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வெந்தய விதைகளை ஊறவைத்து அதன் தண்ணீரை குடிப்பது மிகவும் நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | எச்சரிக்கை! உடலில் கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறிகள்!
ஆப்பிள்
ஆப்பிள் சத்துக்கள் நிறைந்த பழமாகும். இதன் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகக் குறைவாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஆப்பிளை உட்கொள்வது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். ஆப்பிளில் உள்ள அந்தோசயனின் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
ஆரஞ்சு
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு நீரிழிவு நோய்க்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆரஞ்சு பழத்தில் கிளைசெமிக் இன்டெக்ஸ் மிகக் குறைவாக உள்ளது. இது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.
சாலட் இலைகள்
சாலட் இலைகள் நீரிழிவு நோயில் நன்மை பயக்கும். அவை நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் பசியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. சாலட் இலைகளை சாப்பிடுவது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த பயனுள்ளதாக கருதப்படுகிறது.
கீரை
பச்சைக் கீரை நீரிழிவு நோயில் நன்மை பயக்கும். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. கீரை இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்களின் களஞ்சியமாகும். இது குறைந்த கார்ப் கொண்ட உணவாகும். கீரை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பைல்ஸ் பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளுக்கு 'நோ' சொல்லிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ