உடல் எடையை குறைக்க நினைக்கிறீர்களா? இந்த தவறை செய்யாதீர்கள்!
பொதுவாக எடையை குறைக்க நினைப்பவர்கள் எப்பொழுதும் பகுதியளவு உணவை தான் உண்ணவேண்டும்.
உடல் எடையை குறைக்க பலரும் உடற்பயிற்சிகள் செய்வது, உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது என பல விஷயங்களை செய்கின்றனர். ஆனால் உடல் எடை குறைப்பில் நாம் அறியாமல் செய்யக்கூடிய சில தவறுகள் நமது எடை இழப்பை தடுக்கின்றது. தற்போது உடல் எடை குறைப்பில் நாம் செய்யும் முக்கியமான தவறுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கே பார்ப்போம். பொதுவாக மற்ற உணவுகளை காட்டிலும் நமக்கு பிடித்த உணவுகளை கொஞ்சம் அதிகமாக சாப்பிடுவோம், ஆனால் நாம் சாப்பிடும் அனைத்தும் ஊட்டச்சத்து நிறைந்தவை தானா என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். நட்ஸ் வகைகள், நட் பட்டர், ஹம்முஸ் அவகேடோ போன்றவை அதிக ஊட்டச்சத்து நிறைந்தவை, உடல் எடையை குறைக்க இந்த உணவுகள் சிறந்தவை என்றும் அதனால் இவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறானது, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் எப்பொழுதும் பகுதியளவு உணவை தான் உண்ணவேண்டும்.
மேலும் படிக்க | இந்த 3 வழிகளை பின்பற்றினால் போதும்! உடல் எடையை எளிதில் குறைக்கலாம்!
தினசரி உணவில் புரோட்டீன் சேர்த்துக்கொள்ள வேண்டும், புரோட்டீன் போதுமான அளவு சேர்த்துக்கொள்ளாவிட்டால் உடல் எடை குறைப்பில் உங்களுக்கு தடை ஏற்படும். எடையை இழக்க நினைப்பவர்களும், எடையை சரியாய் நிர்வகிக்க விரும்புபவர்களும் போதுமான அளவு புரோட்டீன் சேர்த்துக்கொள்ள வேண்டும். கோழியின் மார்பகம், டர்க்கி பர்கர்ஸ், சிக்கன் சாசேஜ், மீன்கள் மற்றும் பன்றி இறைச்சிகள் புரோட்டீனின் சிறந்த மூலங்களாக விளங்குகின்றது. நமது உடல் எடை விஷயத்தில் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது, தினசரி எவ்வளவு எண்ணெய் பயன்படுத்துகிறோம், எந்த எண்ணெய் பயன்படுத்திறோம் என்பதை பொருத்து நமது எடை இழப்பு நிகழ்கிறது. அதிகளவு எண்ணெய் ஊற்றி சமைப்பதை நிறுத்த வேண்டும், எண்ணெய் தேவைப்படும் பட்சத்தில் கொஞ்சம் ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். கூடுமானவரை காய்கறிகளை சமைக்கும்போது எண்ணெய் சேர்க்காமல் தண்ணீரை பயன்படுத்தியே சமைத்து சாப்பிடுங்கள்.
அடிக்கடி நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும், அப்படி சாப்பிட விரும்பினால் 80/20 என்ற விதியின் அடிப்படியில் சாப்பிடலாம். அதாவது 80% முழு தானியங்கள், புரோட்டீன்கள், நல்ல கொழுப்புகள், பால் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். மீதி 20% நீங்கள் விரும்பும் உணவுகளை சாப்பிடலாம், ஆனால் அதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளாமல் எப்போதுவது சாப்பிடலாம். சில சமயம் நாம் சமைக்கும் உணவுகளில் கூடுதல் சுவைக்காக சில சுவையூட்டிகளை சேர்க்கிறோம், ஆனால் அவை நமது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. உணவின் சுவைக்காக பயன்படுத்தப்படும் சுவையூட்டிகள் நமது உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன. முடிந்தவரை செயற்கையான சுவையூட்டிகளையோ, நிறமூட்டிகளையோ உணவில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
மேலும் படிக்க | குளிர் காலத்தில் உடல் எடையை குறைக்க இந்த ஸ்னாக்ஸ் உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ