கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கும் உணவு வகைகள் இதோ: தொற்றும் தொல்லையும் ஓடிப் போகும்
ஆரோக்கியமான உடலுக்கு ஆரோக்கியமான கல்லீரல் முக்கியமானதாகும். கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால், நீங்கள் பல வயிற்று பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
Health News: ஆரோக்கியமான உடலுக்கு ஆரோக்கியமான கல்லீரல் முக்கியமானதாகும். கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால், நீங்கள் பல வயிற்று பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவது, இரத்தத்தின் அழுக்கை நீக்குவது, நொதிகளை செயல்படுத்துவது என கல்லீரல் பல விதங்களில் செயல்படுகிறது.
கல்லீரல் சரியாக வேலை செய்யாததற்கு பல காரணங்கள் உள்ளன. வறுத்த பொறித்த உணவுகளை சாப்பிடுதல், உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், அதிகப்படியான புகைபிடித்தல் போன்றவை முக்கிய காரணங்களாகும். கல்லீரல் செயலிழப்பு காரணமாக, உடலில் பல பிரச்சினைகள் ஏற்படக்கூடும். கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகளை பற்றி இங்கே காணலாம்.
கிரீன் டீ
கிரீன் டீ கல்லீரலுக்கு (Liver) மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் ஏராளமாகக் காணப்படுகின்றன. இது கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்ற உதவும். நாள் முழுவதும் 2-3 கப் கிரீன் டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
பீட்ரூட்
பீட்ரூட்டை (Beetroot) உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பீட்ரூட் கல்லீரல் மற்றும் இரத்தம் இரண்டையும் சுத்தம் செய்ய உதவும்.
ALSO READ: வெறும் வயிற்றில் நாம் சாப்பிடக்கூடாத உணவுகள் இவையே!
கேரட்
கேரட்டில் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இது நமது உடல் ஆரோக்கியத்தையும் குறிப்பாக கல்லீரலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். குளுதாதயோன், பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கேரட்டில் காணப்படுகின்றன.
வெங்காயம்
வெங்காயம் (Onion) சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வெங்காயத்தில் கந்தகம், பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு ஆகிய பண்புகள் உள்ளன. அவை உங்கள் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றும்.
பூண்டு
பூண்டு கல்லீரலுக்கு மிகவும் நல்லது. பூண்டில் ஆண்டியாக்சிடெண்டுகள், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளன. இவை கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
எலுமிச்சை
எலுமிச்சையின் உதவியுடன் கல்லீரலை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் மாற்றலாம். இயற்கை ஆன்டிஆக்ஸிடன்ட்களும் வைட்டமின் சி-யும் எலுமிச்சையில் ஏராளமாக காணப்படுகின்றன. இவை உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதோடு, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும்.
ALSO READ: வாய் துர்நாற்ற பிரச்சனையா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் உங்களுக்கு கை கொடுக்கும்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR