’அந்த’ விஷயத்துக்கு மட்டுமில்ல: ‘இந்த’ அழகுக்கும் காரணம் முருங்கைக்காய்! தெரியுமா?
Skin Care Beauty Tips: ஆரோக்கியத்திற்கும், பல்வேறு உடல் நலக் கோளாறுகளுக்கும் அருமையான தீர்வாக இருக்கும் முருங்கை, அழகை எவ்வாறு அதிகரிக்கும்? தெரிந்துக் கொள்ளுங்கள்...
நாம் தினசரி பயன்படுத்தும் காய்கறிகளில் உள்ள உண்மையான சத்தையும், அவை அளிக்கும் பலன்களையும் தெரிந்துக் கொள்ளாமலேயே அவற்றை பயன்படுத்தி வருகிறோம். அதில் ஒன்றுதான் முருங்கை. முருங்கையின் காய், விதை, இலை, பூ என அதன் அனைத்து பாகங்களுமே ஆரோக்கியத்திற்கு ஏற்றவை. சொல்லப்போனால், முருங்கை நற்பண்புகளின் சுரங்கம் என்றே சொல்லலாம். முருங்கையில், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, தாமிரம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற பல ஊட்டச்சத்துக்களைக் கொண்ட முருங்கை, ஆரோக்கியத்திற்கு உகந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், முருங்கை, உங்கள் அழகை மேம்படுத்தவும் உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டது முருங்கை. முருங்கையின் இலைகள் இதயத்தைப் பாதுகாக்கிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது, இது இரத்த நாளங்களைத் தடுக்கிறது மற்றும் மாரடைப்பைத் தவிர்க்க உதவுகிறது என்பது அதன் ஆரோக்கிய பண்புகள். இதைத் தெரியாமலேயே முருங்கை மரத்தின் இலைகள், அதன் காய்கள் மற்றும் பூக்களை பல ஆண்டுகளாக நாம் பயன்படுத்தி வருகிறோம்.
மேலும் படிக்க | பருவகால நோய்களில் இருந்து பாதுகாக்கும் சுலபமான வழி
ரசாயன அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தி அலுத்துப்போய், இயற்கையான அழகைப் பெற விரும்புகிறீர்களா? பல அழகுப்பொருட்களில் முருங்கை பயன்படுத்தப்படுகிறது என்ற செய்தி உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஏராளமான நன்மைகளைக் கொண்ட முருங்கையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், அழகுக் சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. முருங்கை எண்ணெய் தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்புக்கு உதவுகிறது.
கொலாஜன் உருவாக்கத்தில் உதவும் முருங்கை: நமது சருமத்தில், கொலாஜன் உருவாக்கத்தை அதிகரிக்க உதவும் பண்பு, முருங்கையில் இயற்கையாகவே உள்ளது. கொலாஜனை உருவாக்க தேவையான வைட்டமின் சி, முருங்கையில் அதிக அளவில் உள்ளது. முருங்கையை பயன்படுத்தும்போது, அதிலுள்ள ஊட்டச்சத்துகள், சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது. கூடுதலாக, இது சருமத்தை இறுக்கமாக்குவதோடு, திறந்திருக்கும் துளைகளை மூடவும் உதவுகிறது.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்கும் மேஜிக் ட்ரிங்க்
முகப்பருவை எதிர்த்துப் போராட உதவும் முருங்கை: முகப்பருவை எதிர்த்துப் போராட உதவும் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முருங்கையில் உள்ளன. கூடுதலாக, முருங்கை இலைகளை பேஸ்ட்டை புள்ளிகளின் மீது தடவினால் முடிவுகளைப் பார்க்கலாம். முகப்பருவை உண்டாக்கும் நச்சுக்களை நீக்கி இரத்தத்தை சுத்திகரிக்க உதவுவதால், முருங்கை பொடியை ஒருவர் உட்கொள்ளலாம்.
முதுமையின் அறிகுறிகளைக் குறைக்கும் முருங்கை: முருங்கை எண்ணெய் அல்லது அதன் பொடி சருமத்திற்கு பளபளப்பை அளிக்கிறது, இது சருமத்தை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது. சருமத்தின் பொலிவிழந்த தன்மையை மாற்றவும், வறட்சியையும் குறைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் மூப்புக்கான அறிகுறிகள் குறையும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காரணமாக, ஃப்ரீ ரேடிக்கல் சேதம் தடுக்கப்பட்டு, தோல் சுருக்கங்கள் குறைகிறது.
கூடுதலாக, இதில் சைட்டோகினின்கள் மற்றும் வைட்டமின் சி உள்ளது, இது தோல் தொய்ந்துப் போவதைத் தடுக்கிறது. எனவே செயற்கையாக முருங்கை எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதைவிட, வீட்டிலேயே முருங்கைப்பொடியை பன்னீருடன் கலந்து சருமத்தில் பூசி பயன்பெறலாம்.
மேலும் படிக்க | கருப்பு திராட்சையுடன் ஜோடி சேர்ந்து பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குங்குமப்பூ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ