Sleep Benefits & Side Effects: மனிதனுக்கு தூக்கம் அத்தியாவசியம். தூக்கம் இல்லையென்றாலே நிச்சயம் மனதும், உடலும் துக்க நிலைக்கு செல்லும். அதுவும் தற்போதைய காலத்தில் மாறியிருக்கும் உணவு பழக்கம், கையில் வந்திருக்கும் ஸ்மார் ஃபோன்களால் பலரும் தங்களது தூக்கத்தை தொலைத்துவருகின்றனர். இதனால் ஒரு மனிதன் சராசரியாக தூங்கும் நேரம் குறைந்துவருகிறது. இதனால் பலர் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேசமயம் சிலர் படுத்தவுடனேயே தூங்கிவிடுவர். அது நல்லதுதான். சிலர் அதீத தூக்கம் தூங்குவர். அவர்களைப் பார்க்கும்போது தூக்கம் வராதவர்களுக்கு பொறாமை ஏற்படும். ஆனால் அதிகமாக தூங்குபவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.


மேலும் படிக்க |சர்க்கரை நோயாளிகள் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


தினமும் 6 முதல் 8 மணி நேரம்வரை தூங்குபவர்களுடன் அதிக நேரம் தூங்குபவர்களை ஒப்பிடும்போது, 8 மணி நேரத்திற்கும் மேல் தூங்குபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல் 25 வயதிற்குட்பட்டவர்கள் இதய செயலிழப்பு, பக்கவாதத்தை எதிர் கொண்டு இறக்கிறார்கள்.



ஆய்வின்படி, இரவில் எட்டு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களைவிட, ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக தூங்குபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் 23 சதவீதம் அதிகம். 


பகலில் 30 நிமிடங்களுக்கு குறைவாக தூங்குபவர்களை விட, 90 நிமிடங்கள் தூங்குபவர்களுக்கும் பக்கவாத வாய்ப்பு 25 சதவீதம் அதிகம். நீண்ட நேரம் தூங்குபவர்கள் மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் 82 சதவீதம் அதிகம். 


மேலும் படிக்க | Spine Health: தீராத முதுகு வலியா; உணவில் ‘இவற்றை’ சேர்க்கவும்


அஅதிகமாக தூங்குபவர்களுக்கு கொழுப்பு அளவு அதிகரிக்கும். இது எடை அதிகரிப்பதற்கு வழிவகுத்துவிடும். ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் பக்கவாத அபாயத்தை 80 சதவீதம் தவிர்த்துவிடலாம் என்பதே மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, எடை இவை மூன்றையும் கண்காணிக்க வேண்டும். 


மேலும் படிக்க | Milk Treatment: இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் பால்: இது ஆரோக்கியத்தை தரும் ஆனந்த பால்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ