Spine Health Tips: தற்போதைய வாழ்க்கை முறை, உணவு பழக்கம் ஆகியவற்றின் காரணமாக, பெரும்பாலானோர் முதுகு வலி, கழுத்து வலியின் காரணமாக அவதிப்படுகின்றனர். இதிலிருந்து விடுபட உடற்பயிற்சி செய்வதோடு, வாழ்க்கை முறையையும், உணவு பழக்க வழக்கத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். முதுகு வலி கழுத்து வலியை குணப்படுத்த வேண்டும் என்றால், நமது முதுலெலும்பை வலுப்படுத்தும் உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நேர்த்தியான உடல் வாகிற்கும் , கம்பீரமான தோற்றத்திற்கும் இன்றியமையாதது முதுகெலும்பு. கணினியின் முன்பே அமர்ந்து பணிபுரிந்து வருபவர்கள், முதுகு வலி மற்றும் முதுகெலும்பு சார்ந்த பிரச்சனைகளை எதிர்க்கொள்கின்றனர். ஏற்பட முக்கிய காரணம் அலுவலகங்களிலோ அல்லது வீட்டிலோ அமர்ந்த நிலையில் 8 முதல் 10 மணி நேரம் தொடர்ந்து பணிபுரிவர்களுக்கு முதுகெலும்பு கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஆனால் வேலை பளுவின் நடுவே நாம் அதை அலட்சியம் செய்கிறோம். இதனால் பாதிப்பு நாள்டைவில் கடுமையாகலாம்.
நீங்கள் முதுகெலும்பை வலுப்படுத்த விரும்பினால், உடற்பயிற்சி செய்வதோடு, வாழ்க்கை முறையையும், உணவு பழக்க வழக்கத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அதனால் நாம் உண்ணும் உணவு மற்றும் அருந்தும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். முதுகுத்தண்டை வலுப்படுத்த எந்தெந்த பொருட்களை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
பச்சை இலை காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகள் அனைத்து உடல் மூட்டுகளுக்கான சிறந்த மருந்து என நம்பப்படுகிறது. இது நமது உடலின் முதுகெலும்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கீரை மற்றும் முட்டைக்கோஸ், புரோக்கோலி போன்ற பச்சை இலை காய்கறிகளில் எலும்பை வலுப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன.
மேலும் படிக்க | Health Tips: பப்பாளி பழத்தை ‘இதனுடன்’ மறந்தும் சாப்பிடக் கூடாது
ஆரஞ்சு நிற காய்கறிகள்
ஆரஞ்சு நிற காய்கறிகளை சாப்பிடுவதாலும் முதுகுத்தண்டும் வலுவடைகிறது. பரங்கிக்காய், சக்கரை வள்ளிக் கிழங்கு, கேரட் போன்றவற்றை அடங்கும்
முதுதண்டை வலுப்படுத்தும் நட்ஸ்
உணவில் பாதாம் பருப்பு, வாதுமை பருப்பு போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிட்டு வர முதுகெலும்பு வலுப்பெறும். பாதாமில் கால்சியம் மற்றும் வைட்டமின்-ஈ நிறைந்துள்ளது. மற்ற கொட்டைகளை விட வதுமை பருப்பில் அதிக ஒமேகா-3கள் இருப்பதாக நம்பப்படுகிறது.
கடல் உணவுகள்
கடல் உணவுகளில் குறிப்பாக சால்மன் மீன்களில் உள்ள மெலிந்த புரதம் முதுகெலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தக்கூடியது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. எலும்பு அடர்த்தியை அதிகரிக்கபதோடு திசுக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்
மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR