ஆரோக்கியம் நிறைந்த சத்தாகன உணவுப் பொருள்களில் மிகவும் முதன்மையாகக் கருதப்படுகின்ற பாலில் கலப்படம் செய்யப்படுகிறது. பாலில் சுத்தமான தண்ணீரை தவிர வேறு எதையும் கலக்க முடியாது, அப்படி கலந்தால் பால் திரிந்து விடும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் அது இல்லை. நம்முடைய இதுபோன்ற அஜாக்கிரதையால் தான் நாளுக்கு நாள் ஏமாற்றுப் பேர் வழிகள் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள். பால் (Milk) என்பது நம்முடைய அன்றாட உணவில் கட்டாயமாகச் சேர்க்கப்படும் ஒரு உணவாகும். பாலில் பொதுவாக நமக்குத் தெரிந்தது தண்ணீர் (Water) தான். தண்ணீர் கலந்திருப்பதை நாம் எளிமையாகவே கண்டுபிடித்துவிட முடியும். அதைத் தாண்டி, ஸ்டார்ச், மாவுப் பொருள்கள் ஆகியவை கலக்கப்படுகின்றன. இவையும் பாலை திக்காக்குவதற்கு தான் கலக்கப்படுகிறதே தவிர இதனால் உடல் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.


ALSO READ | Side Effect Of Milk: அதிகளவில் பால் உட்கொண்டால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்


ஆனால் இப்போது கமர்ஷியலாக பால் பார்க்கப்பட்டதால் நிறைய பிரச்சினைகள் உண்டானது. மாடு (Cow) நிறைய பால் கரக்க ஹார்மோன் ஊசி போடுவதில் இருந்தே பிரச்சினை ஆரம்பித்து விடுகிறது. பால் கெடாமல் இருக்க காஸ்டிக் சோடா, ஹெட்ரஜன் பெராக்சைடு, பார்மலின் போன்ற வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.


பாலில் தண்ணீர் கலந்தால் லாக்டோ மீட்டர் வைத்து வீட்டிலேயே கண்டுபிடித்து விடலாம். பாலை ஒரு கண்ணாடியின் மீது எடுத்து விட்டால் அது வழிந்தோடும். வழிந்தோடும் இடத்தில் தாரை உண்டாகும். அதை வைத்துக் கண்டுபிடிக்கலாம். இதுவே மாவுப்பொருள்கள் கலந்தால் அவை தேங்கி நிற்கும். அதை வைத்து தெரிந்து கொண்டுவிட முடியும்.


பாலில் யூரியா கலந்திருந்தால் ஒரு சிறிய கண்ணாடி டியூபில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில அரை ஸ்பூன் அளவுக்கு சோயா மாவை போட்டு கலந்து நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். இந்த கலவையை சிகப் லிட்மஸ் பேப்பரை எடுத்து அதில் சில துளிகள் விட்டால் அந்த லிட்மஸ் தாள் சிகப்பிலிருந்து நீலமாக மாறினால் அந்த பாலில் யூரியா கலந்திருக்கிறது என்று அர்த்தம்


அதேபோல் பாலில் சோப்பு கலந்திருந்தால் நீங்கள் 5 முதல் 10 மில்லி எடுத்து அதே அளவு தண்ணீரில் கலந்து நன்றாகக் குலுக்க வேண்டும். அதன் மேல்பகுதியில் லேசாக நுரை போல படிந்தால் அதில் நிச்சயம் சோப்பு இருக்கிறது என்று அர்த்தம்.


இந்நிலையில், பால் மிகச்சிறந்த ஒரு சத்துணவுதான் ஆனால், நீங்கள் உபயோகம் படுத்தும் பால் தூய்மையானதா அல்லது கலப்படமானதா என்று சரிபார்ப்பது நல்லது. 


ALSO READ | தாய்ப்பால் கொடுக்கும் சமயங்களில் பெண்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR