நீரிழிவு நோயாளிகள் தினசரி டயட்டில் கண்டிப்பாக சேர்க்க வேண்டிய உணவுகள்!
செயற்கையாக இனிப்பு சுவையூட்டப்படாத இனிப்புகளை தவிர்த்துவிட்டு, இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு பொருட்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.
நீரிழிவு நோயாளிகள் எதையெல்லாம் சாப்பிடலாம், எதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்று பெரிய பட்டியலே உள்ளது. பலரும் அவர்களது டயட்டில் விருப்பமில்லாமல் சில உணவுகளை கட்டாயத்தின் பேரில் சேர்த்து சாப்பிடுகின்றனர். ஆனால் தற்போது இங்கு கூறப்படும் சுவையான உணவுப்பொருட்கள் அவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் என்பது ஒருபுறமிருந்தாலும், இது அவர்களின் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் வகையில் இருக்கிறது. பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, அனைவரும் தினமும் உணவில் ஏதேனும் பழங்களை சேர்த்துக்கொள்வது நல்லது. பழங்களில் என்னதான் சர்க்கரை இருந்தாலும் அதில் நார்ச்சத்தும் நிரம்பியுள்ளது. அதனால் நீரிழிவு நோயாளிகள் அவர்களின் மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த பலன்களை சாப்பிட வேண்டும்.
மேலும் படிக்க | உங்கள் சிறுநீரகம் சுத்தமாக உள்ளதா: தெரிந்துகொண்டு சுத்தப்படுத்துவது எப்படி
பேரீச்சம்பழத்தில் கார்போஹைட்ரேட்டும், நார்ச்சத்தும் உள்ளது. இதனை நீரிழிவு நோயாளிகள் அதிகமாக உட்கொள்ளாமல் குறைவான அளவு சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு குறைந்தது 2-3 பேரீச்சம்பழங்களை சாப்பிடலாம். பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள் அவர்களது டயட்டில் கோதுமையை சேர்த்து கொள்கின்றனர், ஆனால் செலியாக் நோய் உள்ளவர்கள் கோதுமை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அரிசி உணவு சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல என்கிற கருத்து பலராலும் நம்பப்படுகிறது, ஆனால் இதில் அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த அளவு நார்சத்து நிரம்பியுள்ளது. அதனால் நீரிழிவு நோயாளிகள் இதனை அதிகமாக சாப்பிடாமல் குறைவாக சாப்பிடுவது நல்லது. மேலும் பாலிஷ் செய்யப்படாத அரிசி அல்லது ப்ரவுன் அரிசி சாப்பிடுவது நல்லது என்று கூறப்படுகிறது.
அடுத்ததாக சர்க்கரைவள்ளி கிழங்கில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருந்தாலும், அதில் நார்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன, அதனால் நீரிழிவு நோயாளிகள் இதனை மிதமாக பயன்படுத்தி கொள்ளலாம். பாலில் புரதம் மற்றும் கால்சியம் சத்து நிறைந்துள்ளது, இதனை தினமும் மிதமான அளவு உணவில் சேர்த்துக்கொள்ளலாம். செயற்கையாக இனிப்பு சுவையூட்டப்படாத இனிப்புகளை தவிர்த்துவிட்டு, இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு பொருட்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம். உதாரணமாக ஆப்பிள் கீர், திராட்சை கீர், ஆப்பிள் ஓட்ஸ் கஞ்சி போன்றவற்றை சாப்பிடலாம். அடுத்ததாக பருப்பு மற்றும் பட்டாணி வகைகளில் கார்போஹைட்ரேட் இருந்தாலும், அதில் நார்சத்து, புரதம் மற்றும் பல்வேறு வைட்டமின்கள் நிரம்பியுள்ளன. மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவில் எவ்வளவு பருப்பு மற்றும் பட்டாணிகளை சேர்க்கலாம் என்று நீரிழிவு நோயாளிகள் கேட்டறிந்து சாப்பிடலாம்.
மேலும் படிக்க | இனிப்பு சுவையின் அடிப்படை அம்சங்கள் என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR