மெட்டபாலிசம் என்பது நாம் சாப்பிட்ட உணவு செரிக்கப்பட்டு அதிலிருந்து நியூட்ரிஷியன்கள் பிரித்து நம் உடலில் சேருகிற நடைமுறையை குறிப்பிடுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகி  அதிலிருந்து பிரிக்கப்பட்ட ஊட்டசத்துக்களை நம் உடலில் உள்ள செல்கள் கிரகித்து கொண்டு சக்தி கிடைக்கிறது. மெட்டபாலிசம் அதிகம் இருந்தால்தான் நாம் சாப்பிடும் உணவுகள் அதிகமாக சரியான முறையில் ஜீரணமாகி அதிலுள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு நமக்கு சக்தியாக மாறி நமக்கு ஆற்றலை தருகிறது. நமக்கு வயது ஆக ஆக மெட்டபாலிஸம் குறைந்து கொண்டே வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மெட்டபாலிஸம் சிறப்பாக இருப்பவர்களுக்கு என்ன சாப்பிட்டாலும் பிரச்சனை ஏதும் இருக்காது. நிறைய சாப்பிட்டாலும் கூட எடை அதிகரிக்காமல் இருப்பதோடு, எப்போதும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். உடல் பருமனை குறைக்கும் முயற்சி எடுப்பதற்கு முன் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை கூட்டுவதற்கான முயற்சியை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். உடலின் மெட்டபாலிசம் அதிக அளவு இருந்தால் தான் உடல் பருமனை குறைப்பது சாத்தியமாகும். இல்லை என்றால் எவ்வளவுதான் நாம் உடற்பயிற்சி செய்தாலும் கலோரிகள் அவ்வளவு எளிதில் குறையாது.


மெட்டபாலிசம் சரியாக இல்லாதவர்களுக்கு உணவு அஜீரணம், எடை அதிகரிப்பு, மன அழுத்தம், எலும்புகள் மற்றும் தசைகளில் வலி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும். மெட்டபாலிசம் நன்றாக இருந்தால் உடலில் கொழுப்பு சேராது. அதனால் உடல் பருமன் அதிகரிக்காது. சிறந்த வளர்சிதை மாற்றத்தினால், உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்பட்டு உடல் எடை குறைய பெரிது உதவுகிறது.


உடற்பயிற்சி & உணவுகள்


வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க, உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களைச் செய்வது அவசியம். முதலில் அதிகமாக தூங்க கூடாது. உடற்பயிற்சி செய்வதோடு, சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். இது தவிர பச்சைக் காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.


மேலும் படிக்க | குழந்தையின் மூளை கம்ப்யூட்டரை போல் இயங்க வைக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!


புரதச்சத்து நிறைந்த உணவு
 
புரதச்சத்து நிறைந்த உணவுகளும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. புரோட்டீன் நிறைந்த உணவுகளான பால், பாலாடைக்கட்டி மற்றும் பிற பால் பொருட்களுடன், முட்டை, கோழி, மீன், கடல் உணவு மற்றும் இறைச்சி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.  


கிரீன் டீ


கிரீன் டீயில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுவதோடு,  உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது. இது தவிர, ஆரஞ்சு மற்றும் நெல்லிக்காய் போன்ற வைட்டமின்-சி நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)


மேலும் படிக்க | Mental Health: கண்ணீர் விடும் மனது... 6 அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ