Ghee vs Olive Oil: நெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டும் ஆரோக்கியமான பண்புகள் நிறைந்தவை. இரண்டும் சமையலில் பயன்படுத்தப்படுவதோடு, சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. நெய் இந்தியா முழுவதும் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே உள்ளது. இந்தியாவில் ஆலிவ் எண்ணெய் அவ்வளவாக பயன்படுத்தப்படுவதில்லை. அதேசமயம் வெளிநாடுகளில் ஆலிவ் எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டில், ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எதை தேர்தெடுப்பது என்பது சிறது குழப்பமாகத்தான் இருக்கும். இரண்டில் எது அதிக நன்மை பயக்கும் (Health Tips) என்பதை அறிந்து கொள்ளலாம்.


நெய் vs ஆலிவ் எண்ணெய்


நெய்யில் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. இதில் உள்ள வைட்டமின் ஈ உடலுக்கு பல வகைகளில் நன்மை தரக்கூடியது. அதே நேரத்தில், ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. ஆலிவ் எண்ணெயில் இரு வகைகள் உள்ளன. சாதாரண ஆலிவ் எண்ணெய் மற்றும் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் என இரண்டு வகைகளும் உள்ளன. சாதாரண ஆலிவ் எண்ணெயை விட எக்ஸ்ட்ரா வெர்ஜின் எண்ணெய் ஆரோக்கியமானது. 


இருப்பினும், இரண்டின் பலன்களும் வெவ்வேறானவை என்பதால், நமது தேவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யலாம் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். நெய்யை அதிக தீயில் சமைக்கலாம், ஆனால் ஆலிவ் எண்ணெய் 320 டிகிரிக்கு மேல் வெப்பநிலையைத் தாங்காது. நெய் ஜீரணிக்க மிகவும் எளிதானது. ஆனால் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத நோயாளிகளுக்கு ஆலிவ் எண்ணெய் சிறந்தது. 


நெய் vs ஆலிவ் எண்ணெய் ஆரோக்கிய நன்மைகள் 


நெய்யின் நன்மைகள்


1. செரிமானத்தை மேம்படுத்தும்.


2. எலும்புகளை வலுவாக்கும்.


3. சருமத்தின் பொலிவை அதிகரிக்க உதவும்.


4. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.


ஆலிவ் எண்ணெயின் நன்மைகள்


1. இதயம் ஆரோக்கியத்திற்கு நல்லது.


2. உடல் பருமனை குறைக்கும்.


3. உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும்.


4. இரத்த அழுத்தத்தை கட்டுப்ப்படுத்த உதவுகிறது.


நெய் குடலை ஆரோக்கியமாக வைக்க உதவுவதோடு, செரிமான மண்டலத்தை வலுப்படுட்துகிறது. அதே சமயம் ஆலிவ் ஆயில் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் வீக்கம் குறைகிறது. ஆலிவ் எண்ணெயில் சமைத்த உணவை சாப்பிடுவதும் கொலஸ்ட்ரால் குறைகிறது. ஆலிவ் எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளதால், அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதே சமயம், நெய்யை அளவிற்கு அதிகமாக உட்கொண்டால், சில ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம். அளவோடு உட்கொள்ளும் போது நெய் மிகவும் ஆரோக்கியமானது.


மேலும் படிக்க | பாத்ரூமில் அதிக நேரம் இருக்கீங்களா... மலச்சிக்கலை போக்கும் எளிய வழிகள் - உடனே பாருங்க


இதய நோயாளிகளுக்கு நெய்யை விட ஆலிவ் எண்ணெயை உட்கொள்வது நல்லது. கலோரிகளைப் பற்றி பேசுகையில், இரண்டிலும் கலோரிகள் உள்ளன, ஆனால் நெய்யுடன் ஒப்பிடும்போது ஆலிவ் எண்ணெயில் கலோரிகள் சற்று குறைவாக உள்ளன.


நெய் குடலுக்கு மிகவும் நன்மை பயக்கும், இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. நெய் சாப்பிட்டால் எலும்புகள் வலுவடையும். ஆலிவ் எண்ணெயைப் பற்றி பேசுகையில், இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Reverse Walking: உடல் - மூளை இரண்டும் பிட்டாக இருக்க உதவும் பின்னோக்கிய நடைபயிற்சி... இன்னைக்கே ஆரம்பிங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ