Guava Benefits; பைல்ஸ் பிரச்சனைக்கு கொய்யா எனும் அருமருந்து..! வாயு பிரச்சனைக்கும் நிவாரணம்
கொய்யா முறையாக சாப்பிட்டால் பைல்ஸ் முதல் வாயு பிரச்சனைகளுக்கு இயற்கையாகவே தீர்வு காணலாம். இந்த பிரச்சனைகளுக்கு நீங்கள் மாத்திரை சாப்பிடும் அவசியம் இருக்காது.
தவறான உணவுப் பழக்கம், செயலற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் போன்றவற்றால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள நாம் எடுக்கும் முயற்சி பலன் கொடுக்கவிலை என்றால், உடனடியாக கொய்யாபழத்தின் மீது உங்கள் பார்வையை திருப்புங்கள். வயிறு சிக்கலுக்கு கொய்யா தீர்வு கொடுக்கும்.
ஊட்டச்சத்து
ஊட்டச்சத்து நிறைந்த கொய்யாவில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளது. இது தவிர, கொய்யாவில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 ஆகியவையும் கொட்டிக்கிடக்கின்றன. இவை அனைத்துக்கும் மேலாக உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும், கால்சியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் சத்துகளும் உள்ளன.
மேலும் படிக்க | எச்சரிக்கை! ‘இந்த’ காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்கவும்!
1. வயிற்று வலி
கொய்யாவை சரியான முறையில் சாப்பிட்டு வந்தால், வயிற்று வலிக்கு நிவாரணம் கிடைக்கும். கொய்யாவை மென்று சாப்பிடுங்கள், ஆனால் அதன் விதைகளை மென்று சாப்பிடுவதை தவிர்க்கவும். இது உங்கள் வயிற்று வலி பிரச்சனையை அதிகரிக்கலாம்.
2. மலச்சிக்கல்
மலச்சிக்கலை போக்க கொய்யா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கொய்யாவில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது. இது குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
3. பைல்ஸூக்கு தீர்வு
பைல்ஸை குணப்படுத்த, மலச்சிக்கலை குணப்படுத்துவது அவசியம். அதனால், கொய்யா சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். பழுத்த கொய்யாவை சாப்பிடுவதால் மலச்சிக்கலுக்கான தீர்வு உடனே கிடைக்கும். இதன் மூலம் பைல்ஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
4. வாயு மற்றும் அமிலத்தன்மை சிக்கல்
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். உடலில் தேங்கியிருக்கும் வாயுவையும் வெளியேற்றும். வயிறு உப்புசம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் இதன் மூலம் தீர்வு கிடைக்கும்
கொய்யாவின் பலன்கள் இவை என்பதால், வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக இதனைக் கருதக்கூடாது.
மேலும் படிக்க | Diabetics: சர்க்கரை நோயாளிகளுக்கு 'அமிர்தமாகும்' அதிமதுரம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR