வெல்லம் உடலுக்கு நன்மை அளிக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.  ஆனால், வெல்லத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் மிகவும் இளமையாக தோற்றம் அளிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில், வெல்லத்தில் இளமையை தக்கவைக்க உதவும் பல ஆக்ஸிஜனேற்ற பொருட்கள் உள்ளன. அவை வயதானவரகா தோற்றமளிக்க காரணமான அறிகுறிகளை போக்குகின்றன. இதனால், நீங்கள் இளமையாகத் தோன்றம் அளிக்கிறீர்கள். வெல்லத்தை பயன்படுத்தி, சருமத்தில் தோன்றும், சுருக்கங்கள், கரும்புள்ளிகளை நீக்குவதோடு, தலை முடி ஆரோக்கியமா இருக்கவும் உதவுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தோல் மற்றும் கூந்தல் அழகுக்கு வெல்லத்தை பயன்படுத்துவது எப்படி?


வெல்லத்தில் இரும்பு, கால்சியம், துத்தநாகம், தாமிரம், கிளைகோலிக் அமிலம் மற்றும் முதுமையை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. இது உங்கள் தோல் மற்றும் கூந்தலுக்கு நன்மை பயக்கும். வெல்லம் பயன்படுத்துவது தோல் மற்றும் கூந்தலை இளமையாக பாதுகாக்கிறது. 


ALSO READ | Tanning: கை, பாதங்களில், டானிங்கை நீக்க எளிய வீட்டு குறிப்புகள்


முகப்பருவை அகற்ற வெல்லம்


வெல்லம் கரைத்த தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு பேஸ்ட் போல தயாரிக்கவும். இதற்குப் பிறகு, இந்த பேஸ்டை முகப்பருவில் தடவி சில நிமிடங்கள் அப்படியே விடவும். இதனை தினமும் செய்து வந்தால், முகப்பரு நீங்கும்


தோல் புத்துணர்ச்சி பெற


இரண்டு ஸ்பூன் வெல்லம் பொடியை எடுத்து, பின்னர் இரண்டு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு சில துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் தயாரிக்கவும். முகத்தை நன்கு கழுவி, இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள். 5-10 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.


முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி


முகத்தில் இருந்து கரும்புள்ளிகளை நீக்க வெல்லம் பயன்படுத்தவும்.  1 டீஸ்பூன் வெல்லம் தூள், 1 டீஸ்பூன் தக்காளி சாறு, ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்யுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் 15 நிமிடங்கள் தடவி, அது உலர்ந்த பின் கழுவவும்.


ALSO READ | Cod liver Oil: ஆண்மையை அதிகரிக்கும் மீன் எண்ணெய்


சுருக்கங்களைக்  நீக்க தீர்வு


முதலில், ப்ளாக் டீ தயாரித்து அதை குளிர்வித்து, 1 டீஸ்பூன் வெல்லம் தூள், ஒரு சிட்டிகை மஞ்சள், ரோஸ் வாட்டர் மற்றும் திராட்சைப்பழம் சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்யுங்கள். இந்த பேஸ்டை முகத்தில் 20 நிமிடங்கள் தடவி, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.


முடியை மென்மையாக்குவது எப்படி


தலைமுடியை மென்மையாகவும், வலிமையாகவும் மாற்றுவதற்கு வெல்லத்தை கொண்டு ஒரு ஹேர் மாஸ்க் செய்யலாம். ஒரு பாத்திரத்தில் வெல்லம் தூள், தயிர் மற்றும் 2 ஸ்பூன் முல்தானி மிட்டி கலந்து பேஸ்ட் தயாரிக்கவும். இதற்குப் பிறகு, இந்த பேஸ்ட்டை முடி மற்றும் அவற்றின் வேரில் தடவி லேசான மசாஜ் செய்யுங்கள். 15 நிமிடங்களுக்குப் பிறகு முடியை நன்கு தண்ணீரில் கழுவ வேண்டும்.


குறிப்பு- தோலில் எதையும் பயன்படுத்துவதற்கு முன், சிறிய அளவில் தயாரித்து பரிசோதனை செய்யுங்கள்.


ALSO READ | Health Tips: தேனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR