Cod liver Oil: ஆண்மையை அதிகரிக்கும் மீன் எண்ணெய்

மருந்து கடைகளில் கிடைக்கும் காட் லிவர் ஆயில் என்னும் மீன் எண்ணெயில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக உள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 9, 2021, 03:52 PM IST
  • மீன் எண்ணெய் உட்கொள்வது ஆண்களுக்கு பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • கீல்வாதம் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
  • நாம் உட்கொள்ளும் மீன் எண்ணெய் முற்றிலும் தூய்மையானதாகவும், கலப்படம் இல்லாமலும் இருக்க வேண்டும்.
Cod liver Oil: ஆண்மையை அதிகரிக்கும் மீன் எண்ணெய் title=

மீன் எண்ணெய் (Fish Oil) என்பது பொதுவாகவே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பதாகும். மருந்து கடைகளில் கிடைக்கும் காட் லிவர் ஆயில் என்னும் மீன் எண்ணெயில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக உள்ளன.  இது பல வகையில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. மீன் எண்ணெய் ஆண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆண்களுக்கான மீன் எண்ணெயின் நன்மைகள் பற்றி இன்று நாம் தெரிந்து கொள்வோம்.

மீன் எண்ணெயை உட்கொள்வது உடலில் வைட்டமின் டி குறைபாட்டை அனுமதிக்காது. மருந்து கடைகளில் கிடைக்கும் காட் லிவர் ஆயில் என்னும் மீன் எண்ணெய் உட்கொள்வது ஆண்களுக்கு பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மீன் எண்ணெயை தினமும் உட்கொள்வதன் மூலம், ஆண்மை அதிகரித்து தாம்பத்திய வாழ்க்கை மேம்படுவதோடு, அதன் மூலம் குழந்தை பேறு பெரும் வாய்ப்பையும் அதிகரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மீன் எண்ணெயில் EPA, ஆன்டிஆக்ஸிடன்ட்கள்  புதையல் நிறைந்துள்ளன, இது சருமத்தை பாதுகாக்கிறது. இதை உட்கொள்வதன் காரணமாக, தோலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதனால், சருமத்தில் சுருக்க ஏற்படாது. அதனால், முதுமையை தள்ளிப் போடலாம்.

ALSO READ | Health Tips: தேனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள்

மீன் எண்ணெயில் ஒமேகா -3 காணப்படுகிறது. இந்த எண்ணெய் சோகம், பதட்டம், கவனச்சிதறல், மன சோர்வு, மன அழுத்தம் போன்ற மன நோய்களை நீக்குகிறது.

இந்த மீன் எண்ணெய் முழங்கால் பிரச்சினை உள்ளவர்களுக்கு, அதாவது கீல்வாதம் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் நாம் உட்கொள்ளும் மீன் எண்ணெய் முற்றிலும் தூய்மையானதாகவும், கலப்படம் இல்லாமலும் இருக்க வேண்டும்.

நீங்கள் தினமும் மீன் எண்ணெய் எடுத்துக் கொள்வதோடு, உங்கள் உணவில் மாற்றங்களைச் செய்தால், உங்கள் உடல் எடையை நிச்சயமாக குறைக்க முடியும். மீன் எண்ணெய் உடலில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்கிறது.

ALSO READ | Tanning: கை, பாதங்களில், டானிங்கை நீக்க எளிய வீட்டு குறிப்புகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News