அதிக கொழுப்பால் உடலில் பிரச்சனையா? இந்த 5 பானங்கள் உங்களுக்கு கை கொடுக்கும்
Cholesterol Level: உடல் கொழுப்பின் அளவு தேவையை மீறினால், அது பல தீவிர நோய்களுக்கு காரணமாகிறது. இன்றைய ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையே இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
உடல் கொழுப்பு என்பது ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் எதிர்மறையான ஒன்றாகவே பார்க்கபப்டுகின்றது. எனினும், ஆரோக்கியமான செல்களை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், கொலஸ்ட்ரால், அதாவது கொழுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அதன் அளவு தேவையை மீறினால், அது பல தீவிர நோய்களுக்கு காரணமாகிறது. இன்றைய ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையே இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
அதிக கொலஸ்ட்ராலைத் தவிர்க்க சாப்பிட வேண்டிய 5 ஆரோக்கியமான உணவுகள்
கொழுப்பு என்பது உடலில், இரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகுப் பொருளாகும். இது ஆரோக்கியமற்ற உணவுகளால் அதிகரிக்கிறது. பின்னர் இது நரம்புகளில் சேரத் தொடங்குகிறது. கொலஸ்ட்ரால் தமனிகளில் இரத்த ஓட்டத்தில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இதனால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்றன. கொழுப்பை சரியான அளவில் வைத்திருக்க, இந்த 5 விஷயங்களை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
1. தக்காளி சாறு
லைகோபீன் எனப்படும் சத்துக்கள் தக்காளியில் காணப்படுகின்றன. இது உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவை மேம்படுத்துகிறது. தக்காளி சாற்றில் கொலஸ்ட்ராலை குறைக்கும் நார்ச்சத்து மற்றும் நியாசின் இருக்கின்றன. ஆகையால், இதை தினமும் ஒரு கிளாஸ் குடிப்பது நல்லது.
மேலும் படிக்க | உடற்பயிற்சி செய்வதற்கு முன் என்ன செய்யலாம்? எதை தவிர்க்கலாம்?
2. பெர்ரி ஸ்மூத்தி
பெர்ரி ஸ்மூத்தியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இந்த பானங்கள் ஆரோக்கியமானதாகவும் சாப்பிட சுவையாகவும் இருக்கும்.
3. ஓட்ஸ் பானம்
ஓட்ஸ் ஒரு ஆரோக்கியமான உணவாகும். இதில் பீட்டா குளுக்கன்கள் காணப்படுகின்றன. இது உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. எனவே, தினமும் ஓட்ஸ் ட்ரிங்க்ஸ் குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது.
4. கிரீன் டீ
கிரீன் டீயில் கேடசின்கள் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் ஏராளமாக காணப்படுகின்றன. கிரீன் டீ ஆரோக்கியமற்ற கொழுப்பைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
5. சோயா பால்
சோயா பால் மூலம், தேவையற்ற கொழுப்பை எளிதாகக் குறைக்கலாம். மேலும் இது மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 25 கிராம் சோயா பால் உட்கொள்வது நல்லது.
மேலும் படிக்க | சர்க்கரை நோய் இருந்தால் 8 விஷயங்களை உணவில் சேர்க்க மறக்காதீர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR