உடற்பயிற்சியும் சரியான உணவுமுறையும் இணைந்தால் ஆரோக்கியத்தை பற்றிய கவலையே தேவையில்லை.
பிரபல ஊட்டச்சத்து நிபுணரும், உடற்பயிற்சி நிபுணருமான ருஜுதா திவேகர், வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய வேண்டுமா அல்லது உடற்பயிற்சிக்கும் உணவுக்கும் இடையே சரியான இடைவெளியை உண்டா என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
உங்கள் உடலுக்கு சரியான அளவு ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்களை வழங்கினால் மட்டுமே, வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகமாக வைத்திருக்க முடியும். மேலும், ஒவ்வொரு வொர்க்அவுட் அமர்வுக்கு பின்னரும் உடலுக்கு புத்துணர்சி கொடுக்கவும் உதவவும்,
மேலும் படிக்க | அதிக உடற்பயிற்சி மாரடைப்பை ஏற்படுத்துமா?
தவறாமல் உடற்பயிற்சி செய்வது பயனுள்ளதாக இருக்கும் ஆனால், அத்துடன் சேர்க்க வேண்டிய அல்லது தவிர்க்க வேண்டிய உணவு மற்றும் உணவு பழக்கங்களில், உடல் தசைகளை மீட்டெடுக்க வொர்க்அவுட்டிற்குப் பிந்தைய உணவு முக்கியமானது என்று அவர் தனது இன்ஸ்டா வீடியோவில் கூறுகிறார்.
ஆனால் உடற்பயிற்சிக்கு முந்தைய உணவும் அவசியமான ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா?
அனைவரும் தவறவிடும் முக்கியமான விஷயங்களில் ஒன்று உடற்பயிற்சிக்கு முந்தைய உணவு. எனவே, வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது நல்லதா இல்லையா என்று யாராவது கேட்டால், வொர்க்அவுட்டின் போது ஒருவர் செய்யக்கூடிய மோசமான செயல் என்று நிபுணர்கள் எப்போதும் கூறுகின்றனர்.
உடற்பயிற்சி செய்வது என்பது மிகவும் அவசியமானது என்பதால், பலரும் தினசரி உடற்பயிற்சிகளை செய்கின்றனர். ஆனால், அனைவருக்கும் அது உகந்த பலனை அளிக்கிறதா என்பது கேள்விக்குறி.
மேலும் படிக்க | சர்க்கரை நோய் இருந்தால் 8 விஷயங்களை உணவில் சேர்க்க மறக்காதீர்கள்
உடற்பயிற்சி செய்வதற்கு முன் பின்பற்ற வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்பதை தெரிந்துக் கொண்டால், உடற்பயிற்சி செய்வது சரியான ஆரோக்கியப் பயன்களை கொடுக்கும்.
உடற்பயிற்சிக்கு முந்தைய உணவை சரியாகப் பெறுவது ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாகும். வெறும் வயிற்றில் மற்றும் தேநீர் அல்லது காபி சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சிவது சரியா என்பது போன்ற பல கேள்விகள் எழும்.
உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிட வேண்டுமா?
ஜிம்மிற்கு செல்வதற்கு முன்னதாகவோ, அல்லது வீட்டில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னரோ ஏதாவது சாப்பிடுவது மிகவும் முக்கியம். ஏன் சாப்பிட வேண்டும்?
உங்கள் உடலுக்கு போதுமான எரிபொருளைப் பெற உணவு உதவுகிறது, ஜிம்மிற்குச் செல்லும்போது அல்லது உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் போது தசைகள் உடனடியாக வேலை செய்யத் தொடங்கும். எனவே உடற்பயிற்சி செய்வதற்கு முன்னதாக உணவு உண்பது அவசியம்.
மேலும் படிக்க | உடற்பயிற்சி செய்யாமலே ஆரோக்கியமாக இருக்கவேண்டுமா?
ஏன் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யக்கூடாது?
ஒவ்வொரு வொர்க்அவுட் அமர்வுக்கு முன்பும் நம் உடலுக்கு நன்கு ஊட்டமளிக்கும் மற்றும் திட்டமிடப்பட்ட உணவுகள் தேவை. இந்தப் பணியைச் செய்வதற்கு, உடலின் தசைகள் சரியான எரிபொருளை (ஒர்க்அவுட்டுக்கு முந்தைய உணவு மூலம்) வழங்கும்போது, அவை கலோரிகளை சிறப்பாக எரிக்கின்றன.
உடற்பயிற்சியின் போது கலோரி எரிவதற்கு இது துணைபுரிகிறது. வொர்க்அவுட்டின் போது ஏற்படும் காயங்களைத் தடுக்கவும் இந்த பழக்கம் உதவுகிறது. உடற்பயிற்சியை செய்ய திட்டமிடும்போதும், செய்யத் தொடங்கும் போதும், அதன் அதிகபட்ச முடிவுகளைப் பெற விரும்புகிறோம்.
அதை சரியான முறையில் பெற வேண்டுமானால், உடலில் சக்தி அவசியம். தசையை இழுப்பதன் மூலமோ அல்லது உடல் உறுப்பைக் கஷ்டப்படுத்துவதன் மூலமோ அல்லது சோர்வடைவதன் மூலமோ அடிக்கடி நம்மை நாமே காயப்படுத்திக் கொள்கிறோம்.
உடலுக்கு தேவையான எரிபொருள் இருப்பு இருந்தால், காயங்களைத் தவிர்க்கலாம் மற்றும் உங்கள் வொர்க்அவுட் உண்மையான பலனைத் தரும்.
மேலும் படிக்க | நோய்களுக்கு வேம்பாகும் வெந்தயம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR