நோய்களுக்கு மரபணு காரணி உண்டா என்பது எப்போதும் எல்லோருக்கும் எழும் கேள்வி. நோய்கள் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்தாலும், தற்போது கோவிட் தொடர்பான ஆய்வுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மையில் கோவிட்-19 தொடர்பாக வெளியிடப்பட்ட ஆய்வின் அறிக்கையில், லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் அல்சைமர் நோய் மற்றும் கடுமையான COVID-19 ஆபத்து இரண்டையும் பாதிக்கும் ஒரு மரபணுவை அடையாளம் கண்டுள்ளனர்.


OAS1 என்பது, மரபணுவின் ஒரு மரபணு மாறுபாடு ஆகும். இது, அல்சைமர் நோய் அபாயத்தை ஏறக்குறைய 3-6 சதவீதம் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர், அதேசமயம் அதே மரபணுவில் தொடர்புடைய வேறுபாடுகள் கடுமையான COVID-19 விளைவுகளின் வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.


ALSO READ | ஓய்வு எடுப்பது ஆபத்தா? அதிர்ச்சி தகவல்!


Brain மருத்துவ சஞ்சிகையில் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள், ஆராய்ச்சி, மருந்து வளர்ச்சி மற்றும் நோய்களின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கான புதிய இலக்குகளுக்கு வழி வகுக்கும். கூடுதலாக, இந்த ஆய்வு இரண்டு நிலைகளுக்கும் சிகிச்சைகளுக்கான சிகிச்சைகளை பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பையும் சுட்டிக்காட்டுகிறது. 


அதோடு இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள், தொற்று நோய்கள் மற்றும் டிமென்ஷியாக்களுடன் தொடர்புடைய பிற நிலைமைகளின் ஆய்வுக்கும் உதவியாக இருக்கலாம்.


"மூளையில் அமிலாய்டு புரதம் ஏற்படுத்தும் சிக்கல்களே அல்சைமர்ஸ் நோய் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக இருக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தின் முக்கியத்துவத்தை மூளையின் செயல்பாடுகள் தீர்மானிக்கின்றன. அல்சைமர் நோய் மற்றும் கோவிட் -19 இரண்டிலும் ஒரே மாதிரியான நோயெதிர்ப்பு அமைப்பு மாற்றங்கள் ஏற்படலாம் என்பதை இந்த ஆய்வின் மூலம் நாங்கள் கண்டறிந்துள்ளோம்” என இந்த ஆய்வின் முன்னணி ஆய்வாளர் டாக்டர் டெர்விஸ் சாலிஹ் (UCL Queen Square Institute of Neurology and UK Dementia Research Institute at UCL) தெரிவித்துள்ளார்.


ALSO READ | மாதவிடாய் காலங்களில் மென்சுரல் கப் பயன்படுத்து நல்லதா


"கடுமையான கோவிட் -19 தொற்று உள்ள நோயாளிகளுக்கு, மூளையில் அழற்சி மாற்றங்களும் ஏற்படலாம். அல்சைமர்ஸ் மற்றும் கோவிட் -19 இரண்டின் அபாயங்களை அதிகரிக்க மிகைப்படுத்தப்பட்ட நோயெதிர்ப்பு சக்திக்கு ஒரு மரபணுவை நாங்கள் கண்டறிந்துள்ளோம்" என்று அவர் கூறுகிறார்.


கண்டுபிடிப்புகளின்படி, புதிதாக அடையாளம் காணப்பட்ட 'rs1131454' எனப்படும் OAS1 மரபணு மாறுபாடு உள்ளவர்களுக்கு அல்சைமர் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


ஆராய்ச்சியாளர்களால் அடையாளம் காணப்பட்ட புதிய மாறுபாடு பொதுவானது, ஏனெனில் இது ஐரோப்பியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை பாதிக்கிறது, மேலும் இது அறியப்பட்ட பல ஆபத்து மரபணுக்களை விட, அல்சைமர் அபாயத்தை முன்னறிவிக்கிறது என்றும் கூறப்படுகிறது.


அப்படி என்றால், கோவிட் பாதிப்பு ஏற்பட்டு மீண்டவர்களுக்கு அல்சைமர் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் என்ன என்ற கேள்விகள் சாமானிய மக்களுக்கு எழுகின்றன. இந்த கேள்விகளுக்கு அடுத்தக்கட்ட ஆய்வுகள் பதிலளிக்கக்கூடும்.


READ ALSO | எலும்பு மெலிதல் நோயிலிருந்து தப்பிக்க கால்ஷியம் போதாது  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR