வழக்கமாக நாம் பயன்படுத்தப்படும் தயிர் சைவமா இல்லையா என்ற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர். இது முட்டை, சைவமா இல்ல அசைவமா என்ற கேள்விக்கு சமமான கேள்வியாக இருப்பதால், இதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.தயிர் உடலுக்கு நல்லது என்பதால் அதை அதிகமாக பயன்படுத்தலாம். தயிர் மற்றும் மோர் இரண்டுமே உடலுக்கு ஆரோக்கியமானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் பால், சுத்த சைவம் அல்ல என்று பலர் கருதுகின்றானர். பசுமாடு, எருமை மாடு இரண்டும் பால் கொடுக்கும் விலங்குகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன. 


ஆடுகள், ஒட்டகங்களிடம் இருந்து பால் கறந்தாலும் அவை பெரிய அளவில் இல்லை, அவை மாட்டுப்பால், எருமைப்பால் போன்று அதிக அளவில் விற்கப்படுவதும் இல்லை. 


விலங்குகளிடம் இருந்து உணவுப்பொருட்கள்
பால் மற்றும் நாம் உண்ணும் மாமிசம் இரண்டுமே விலங்குகளிடம் இருந்து பெறப்படுவதால் பாலை தவிர்ப்பது நல்லது என்பது வீகன் முறையை பின்பற்றுபவர்களின் வாதமாக இருக்கிறது. 


மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை: இவைதான் நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள்!!


பசும்பால் எருமைப்பாலை விட சத்தானது, சுலபமாக செரிமானம் ஆகக்கூடியது என்பதால், பசும்பாலுக்கு மவுசு அதிகமாக இருக்கிறது. பால் சத்தானது என்றாலும், சிலருக்கு அது ஒவ்வாமையையும் ஏற்படுத்தும்.


சரி, பால் சைவமா இல்லை அசைவமா என்ற கேள்விக்கு பதில் சொல்வதற்கு, பாலின் ஊட்டச்சத்துக்கள் பற்றி தெரிந்துக் கொள்வது அவசியமானது.  பால் மிகச்சிறந்த ஒரு சத்துணவாக அறியப்படுவது. இதில், புரதம், கால்சியம்,வைட்டமின் பி, வைட்டமின் டி என பல சத்துக்களுள் உள்ளன. 


பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் என அனைவருக்கும் பால் ஒன்றே ஏற்றது. குழந்தைகளுக்கு பால் அடிப்படையான உணவு என்றால் அது முதியவர்களுக்கு சப்ளிமென்ட் உணவு ஆகும். 


பால் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பலவிதமான உணவுப் பொருட்களில் முதன்மையானது தயிர். தயிரில் இருந்து தயாரிக்கப்படுவது மோர். இவை இரண்டையும் அப்படியே சாப்பிடலாம் அல்லது சுவையான, காரமான மற்றும் இனிப்பு உணவுகளிலும் பயன்படுத்தலாம். பாலில் ஈஸ்ட் அல்லது பாக்டீரியா சேர்த்து புளிக்கவைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன.  


மேலும் படிக்க | உடல் எடையை வேகமா குறைக்கும் பப்பாளி.. இன்னும் பல நன்மைகளும் இதில் இருக்கு


தயிர் 
ஈஸ்ட் அல்லது பாக்டீரியா சேர்த்து பாலை புளிக்கவைத்தால் உருவாகிறது தயிர். நொதித்தல் செயல்முறையினால், பாலில் உள்ள லாக்டோஸ் லாக்டிக் அமிலமாக உடைந்து தயிருக்கு புளிப்புச் சுவையை அளிக்கிறது.


யோகார்ட்
பாலில் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் போன்ற அமிலப் பொருட்கள் கலந்து யோகார்ட் தயாரிக்கப்படுகிறது. தயிரைப் போன்றே பாக்டீரியல் நொதித்தல் மூலம் யோகர்ட் உருவாக்கப்படுகிறது.


தயிர் மற்றும் யோகார்ட்
தயிரும் யோகார்ட்டும் ஏறக்குக்றைய ஒரே ஊட்டச்சத்துக்களைக் கொண்டவை. அவற்றின் பயன்பாட்டில் தான் வித்தியாசம். யோகார்ட் சுவையூட்டிய தயிர் என்றும் சொல்லலாம். இது, வாழைப்பழம், புளுபெர்ரி, மாம்பழம், வெண்ணிலா, ஸ்ட்ராபெரி போன்ற பல சுவைகளிலும் உருவாக்கப்படுகிறது. 


மேலும் படிக்க | எலுமிச்சை சாறுடன் வெதுவெதுப்பான நீர்: எடை இழப்பில் மேஜிக் நடக்கும்


சைவத் தயிர் 
சைவ தயிர் என்பது பசு, எருமை போன்ற விலங்குகளின் பால் இல்லாமல் செய்யப்படும் தயிர் ஆகும். சைவ தயிர் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பது ஆச்சரியமாக இருக்கலாம். பாலுக்கு பதிலாக, வேர்க்கடலை அல்லது சோயா போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் தயிர், சைவம் என்று சொல்லப்படுகிறது.


பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிரைப் போலவே, சைவ பாலில் இருந்து தயிர் தயாரிக்கப்படுகிறது. வழக்கமான தயிர் போன்றே, வீகன் தயிர் என்று சொல்லப்படும் சைவத் தயிர் தயாரிப்பில் நொதித்தல் செயல்முறை நடைபெறும்.  


சைவத் தயிர் ஆரோக்கியமானதா?
வ தயிர் ஆரோக்கியமானது. இதில் கொலஸ்ட்ரால் இல்லை, ஹார்மோன்கள் இல்லை, லாக்டோஸ் இல்லை, சேர்க்கைகள் இல்லை, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இல்லை, என்பதுடன் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளது.  


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தயிர் சாதம்..... சுவையிலும் ஆரோக்கிய நன்மைகளிலும் டாப் டக்கர்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ