Little Millet: சாமை காய்கறி புலாவ் சாப்பிட்டதுண்டா? இதோ செய்முறை
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொண்ட சாமை சிறுதானிய வகைகளில் குறிப்பிடத்தக்க இடத்தை கொண்டுள்ளது. உடலுக்கு வலுவேற்றும் சாமையில் உள்ள அதிகப்படியான கால்சியம் காரணமாக எலும்புகள் வலு பெறுகின்றன. உடலின் தசைகளும் வலுப்பெறுகிறது.
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொண்ட சாமை சிறுதானிய வகைகளில் குறிப்பிடத்தக்க இடத்தை கொண்டுள்ளது. உடலுக்கு வலுவேற்றும் சாமையில் உள்ள அதிகப்படியான கால்சியம் காரணமாக எலும்புகள் வலு பெறுகின்றன. உடலின் தசைகளும் வலுப்பெறுகிறது.
புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புகள், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, துத்தநாகம், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை சாமையில் அடங்கியுள்ளன.
சாமையை பல்வேறு விதமாக சமைத்து உண்ணலாம். வெஜிடபுள் சாமை சாப்பிட்டதுண்டா? இதோ எளிய முறையில் சாமை புலாவ் தயாரிக்கும் முறை இது...
Also Read | ஆரோக்கியமான வாழ்வுக்கு அஸ்திவாரம் போடும் தினை
தேவையான மூலப்பொருட்கள்:
சுத்தம் செய்த சாமை – 1 கப்
கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் – 1 கப் (நறுக்கியது)
வெங்காயம் நறுக்கியது – 1 கப்
தக்காளி (பெரியது) – 1
பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
இஞ்சி – 1 சிட்டிகை
தேங்காய் துருவல் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உ.பருப்பு, க.பருப்பு – தலா ¼ தேக்கரண்டி
எண்ணெய் – 3 டீஸ்பூன்
உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி – தேவையான அளவு
Also Read | அடடா, சாமையில் இத்தனை நன்மைகளா? தெரியாம போச்சே!
செய்முறை:
சாமையைக் கழுவி வைத்துக் கொள்ளவும். சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறாமாகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு நறுக்கிய தக்காளி, உப்பு, காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். இதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சாமையை சேர்க்கவும். மிதமான தீயில் வேக விடவும். வெந்ததும் கொத்தமல்லி தழை, தேங்காய்த் துருவல் தூவி இறக்கி புதினா சட்னியுடன் சாப்பிட மூலநோய் குணமாகும். நரம்பு தளர்ச்சி நீங்கும்.
Also Read | Easy Weight Loss: உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி தேவையில்லை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR