Little Millet: அடடா, சாமையில் இத்தனை நன்மைகளா? தெரியாம போச்சே!

புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புகள், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, துத்தநாகம், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை சாமையில் அடங்கியுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 27, 2021, 05:12 PM IST
  • உடலுக்கு வலிமை தரும் சாமை
  • உயிரணுக்களின் எண்ணிக்கையையும் கணிசமாக உயர்த்தும்
  • அரிசியை காட்டிலும் ஏழு மடங்கு அதிக நார்சத்து கொண்டது சாமை
Little Millet: அடடா, சாமையில் இத்தனை நன்மைகளா? தெரியாம போச்சே! title=

சிறுதானிய வகைகளில் சாமை பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொண்டது. புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புகள், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, துத்தநாகம், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை சாமையில் அடங்கியுள்ளன.

உடலுக்கு வலிமை தரும் சாமையில் உள்ள அதிகப்படியான கால்சியம் காரணமாக எலும்புகள் வலு பெறுகின்றன. உடலின் தசைகளையும் வலிமை பெறச் செய்கிறது.

விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் சாமை, ஆண்களின் இனப்பெருக்க விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது. உயிரணுக்களின் எண்ணிக்கையையும் கணிசமாக உயர்த்தும்.

Also Read | ஆரோக்கியமான வாழ்வுக்கு அஸ்திவாரம் போடும் தினை மலட்டு தன்மையை நீக்கும்

சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகமாக இருப்பதால், ரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது சாமை.  சாமையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

அரிசியை காட்டிலும் ஏழு மடங்கு அதிக நார்சத்து கொண்ட சாமையை சாப்பிட்டால், ஆரம்ப நிலையில் உள்ள சர்க்கரை நோயை வராமலே தடுத்து பாதுகாக்கும்.

சாமையை உணவில் அடிக்கடி சேர்த்து கொண்டால் நோய்களுக்கெல்லாம் ஆண்வேரான மலச்சிக்கலிருந்து விடுபடலாம்.  வயிற்றுக் கோளறுகளையும் சரி செய்யும் சாமை பல மருத்துவ ரீதியிலான நன்மைகளையும் கொண்டுள்ளது.

Also Read | Easy Weight Loss: உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி தேவையில்லை தெரியுமா?

சாமையில் உள்ள இயற்கையான சுண்ணாம்பு சத்தானது எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கும், எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகள் வலிமைபெறவும் உதவுகிறது.

சாமையில் உள்ள ஃபோலிக் அமிலம் வளமானது. இதில் உள்ள புரதச்சத்து மற்ற தானியங்களைவிட அதிகம் என்பதால் குழந்தைகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் நல்ல உடல் வலிமையை தரும்.

உடலுக்கு நன்மை தரும் கொழுப்புகள் சாமையில் அடங்கியுள்ளதால் இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து பாதுகாத்து, மாரடைப்பு வராமல் தடுக்கும்.

Also Read | Allergy: ஆணுறையும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் அதற்கான காரணம் தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Trending News