Health Tips: வயிற்று வலி, அஜீரண கோளாறுகளுக்கு அருமருந்து கொத்தமல்லி
உணவே மருந்து என்பது நமது கலசாரம். அதிலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் விலை மலிவான பொருட்களில் இருக்கும் சத்துக்கள் பற்றித் தெரியாமலேயே அதன் சுவை மற்றும் மணத்திற்காக நாம் உணவில் சேர்க்கிறோம். அப்படிப்பட்ட பொருட்களில் முக்கியமானது கொத்தமல்லி இலை.
புதுடெல்லி: பசிக்கும் ருசிக்கும் மட்டும் உண்பதல்ல உணவு, நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கிறது. நமது உணவில் சரிவிகித சத்துக்கள் இருந்தால், மருந்து என்ற ஒன்றே தேவையில்லை.
உணவே மருந்து என்பது நமது கலசாரம். அதிலும் நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் விலை மலிவான பொருட்களில் இருக்கும் சத்துக்கள் பற்றித் தெரியாமலேயே அதன் சுவை மற்றும் மணத்திற்காக நாம் உணவில் சேர்க்கிறோம். அப்படிப்பட்ட பொருட்களில் முக்கியமானது கொத்தமல்லி இலை.
உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. ஆரோக்கியத்தை உறுதி செய்யும் கொத்தமல்லி இலையை வீட்டில் ஒரு மண் தொட்டிலியே கூட வளர்த்து பயனடையலாம். கொத்தமல்லித் தழை என்றும் அழைக்கப்படும் இந்த செடியின் இலைகள் ஒரு மூலிகை என்பது தெரியுமா?
Also Read | வெந்தயத்தின் நன்மைகள், பயன்பாடு, பக்கவிளைவுகள் என்ன தெரியுமா?
கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் இருக்கிறது. அதுமட்டுமா? பட்டியல் இன்னும் நீள்கிறது. மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்து என பல்வேறு சத்துக்கள் இந்த இலையில், கொத்தமல்லித் தழையில் அடங்கியிருக்கிறது.
வயிற்று வலி, அஜீரண கோளாறுகள் போன்றவற்றை போக்குகிறது, ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தை மேம்படுத்துகிறது கொத்தமல்லி.
Also Read | இளம் வயதிலேயே சுகாதார காப்பீடு எடுப்பதற்கான காரணங்கள் என்ன?
பொட்டாசியம் சத்து நிறைந்திருப்பதால், உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். ரத்த குழாய்களை சுத்தம் செய்யும் தன்மை வாய்ந்தது கொத்துமல்லித் தழை.
உணவே மருந்தாக, உணவில் சேர்த்தால் பல நன்மைகளை கொடுக்கும் கொத்தமல்லியை அரைத்து, கண்களைச் சுற்றி வைத்தால், கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள் மற்றும் கருவளையங்கள் நீங்கும் என்பதால் இது அழகுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
ALSO READ | நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகள் 2023-க்குள் மின்மயமாக்கப்படும்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR