Health News: வெந்தயத்தின் நன்மைகள், பயன்பாடு, பக்கவிளைவுகள் என்ன தெரியுமா?

வெந்தயம் என்ற பெயர் நாம் தினசரி கேட்பது என்பதால் அதன் உண்மையான பயன்கள் தெரியாமல் அதை சாதாரணமாக நினைத்துவிடுகிறோம். வெந்தயம், உணவுப்பொருள் (Food) மட்டுமல்ல, மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தில் நீர்ச்சத்து, மாவுச்சத்து புரதச்சத்து, கொழுப்பு சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 25, 2021, 08:17 PM IST
  • வெந்தயத்தை தினசரி பயன்படுத்தினால் ஆரோக்கியம் மேம்படும்
  • சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து
  • வறட்சியைப் போக்கும், வயிற்று வலிக்கு நிவாரணம் கொடுக்கும்
Health News: வெந்தயத்தின் நன்மைகள், பயன்பாடு, பக்கவிளைவுகள் என்ன தெரியுமா?  title=

புதுடெல்லி: வெந்தயம் என்ற பெயர் நாம் தினசரி கேட்பது என்பதால் அதன் உண்மையான பயன்கள் தெரியாமல் அதை சாதாரணமாக நினைத்துவிடுகிறோம். வெந்தயம், உணவுப்பொருள் (Food) மட்டுமல்ல, மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தில் நீர்ச்சத்து, மாவுச்சத்து புரதச்சத்து, கொழுப்பு சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.

வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். வறட்சியை அகற்றும் தன்மை கொண்டது. வெந்தயத்தில் உள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். வெந்தயத்திலுள்ள எண்ணை பசை, தலைமுடிக்கு (Hair) வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. எனவே கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.

தமிழர் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இதன் செடி கீரையாகவும், விதைகள் சுவையூட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தின் நன்மைகளும் அது நம்மை நோயை அண்டவிடாமல் காக்கும் பண்பு பற்றியும் தெரியுமா? 

Also Read | Health Tips: உடலின் பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் தயிர்...!!

வெந்தயத்தில் அதிக அளவிலான நார்சத்து உள்ளது. சர்க்கரை நோயாளிகளின் (Diabetics) ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் (Blood Sugar), ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ராலையும் குறைக்கின்றது. வெந்தயத்தை சமைத்தாலும், அப்படியே சாப்பிட்டாலும் இந்த பலன் கிடைக்கும்.  சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, நல்ல பலனைக் கொடுக்கும்.  

வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் (Water) ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். அல்லது பொடியாக இடித்து தண்ணீர் அல்லது மோரில் (Butter Milk) கலந்து குடிக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகளவு இருக்கும்வரை வெந்தயத்தை உட்கொள்ளலாம். வெந்தயம் எடுத்துக்கொள்வதுடன் தினமும் நடைபயிற்ச்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம். 

Also Read | Health News: நாம் தினமும் குடிக்கும் தேநீரில் இத்தனை அபூர்வ விஷயங்களா!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News