முடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெயில் இதை கலக்கவும்: இன்றைய காலகட்டத்தில் முடி உதிர்தல் (Hair Fall) பிரச்சனை மக்களிடையே அதிகரித்து வருகிறது. முன்கூட்டிய நரை முடி மற்றும் முடி உதிர்தல் இன்றைய காலகட்டத்தில் பொதுவாக அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாகும். இதுபோன்ற பிரச்சனைகளை குறைக்கும் பல பொருட்கள் சந்தையில் கிடைத்தாலும், அவற்றில் உள்ள ரசாயனங்கள் சில சமயங்களில் உங்களுக்கு பலன் கொடுப்பதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். அதனால், மக்களிடையே வீட்டு வைத்தியம் மீதான மோகம் அதிகரித்துள்ளது. அவை முடியை ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும், கருப்பாகவும் மாற்ற உதவுவது மட்டுமல்ல, இவை முடிக்கு எந்த வகையான பக்க விளைவையும் ஏற்படுத்தாது. எனவே உங்கள் தலைமுடியை கருப்பாகவும், அடர்த்தியாகவும், நீளமாகவும் மாற்ற உதவும் வீட்டு வைத்தியத்தை பற்றி தான் இன்று நாம் காண உள்ளோம். அவற்றை பற்றி விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீட்டு வைத்தியத்தின் (Home Remedies For Long Hair Growth) மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவென்றால், இதை தயார் செய்ய நீங்கள் அதிகப் பணம் செலவு செய்ய வேண்டியதிலலை. உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டுதான் இந்த ஹேர் டானிக்கை தயாரிக்க முடியும்.


மேலும் படிக்க |  இரண்டு மறை பல் தேய்த்தும் மஞ்சள் கறை போகவில்லையா... இதை செய்து பாருங்கள்!


முடியை வலுப்படுத்த ஹேர் டானிக் (Hair Growth Home Remedies)


தேவையான பொருட்கள்:
கற்றாழை ஜெல் (Aloevera Gel)
கறிவேப்பிலை (Curry Leaves)
தயிர் (Curd)
தேங்காய் எண்ணெய் (Coconut Oil)


முடிக்கு டானிக் செய்வது எப்படி
இந்த ஹேர் டானிக் செய்ய, முதலில் ஒரு பாத்திரத்தில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளவும். இப்போது அதில் கறிவேப்பிலை, தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் கலக்கவும். அதன் பிறகு, இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இப்போது சல்லடையின் உதவியுடன், சாற்றை வடிக்கப்பவும். காட்டன் அல்லது புரஷின் உதவியுடன், இந்த கலவையை உங்கள் முடியின் வேர்கள் மற்றும் நுனிகளில் நன்கு தடவவும். சுமார் அரை மணி நேரம் கழித்து, தலைமுடியைக் கழுவி சுத்தம் செய்யவும். இந்த ஹேர் டானிக்கை நீங்கள் வாரம் ஒருமுறை பயன்படுத்தவும். 7 முறை பயன்படுத்திய பிறகு, உங்கள் தலைமுடியில் தடிமன் மற்றும் கருமை இரண்டையும் பெற நீங்கள் தொடங்குவீர்கள்.


ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் தேங்காய் எண்ணெய் ஸ்பிரே


தேவையான பொருள்கள்:
ஆப்பிள் சிடார் வினிகர் - 2 ஸ்பூன் (Apple Cider Vinegar)
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன் (Coconut Oil) 


பயன்படுத்தும் முறை
ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஆப்பிள் சிடார் வினிகருடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி ஸ்பிரே செய்து நன்கு 15 நிமிடங்கள் மசாஜ் செய்து பின் மென்மையான ஹெர்பல் ஷாம்பு கொண்டு தலையை அலசுங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க.... உணவுகளும் பழக்கங்களும்.!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ