நமது உடல் என்பது, நரம்புகளின் வலையமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நரம்பு வலையமைப்பு, வலுவாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பது மிகவும் அவசியமானது. ஆனால் பல சமயங்களில் நரம்பு மண்டலம் பலவீனமடைந்துவிடுகிறது. அன்றாட வாழ்க்கையை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் நரம்பு பிரச்சனையால், நடப்பதில் சிரமம் மட்டுமல்ல, சியாட்டிகா, கார்பல் டன்னல் சிண்ட்ரோம், நீரிழிவு என பல கடுமையான நோய்களாலும் பாதிப்புகள் ஏற்படலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நரம்பு மண்டலம் பலவீனமடைந்தால், உங்கள் உடலால், உடல் அனுப்பும் சமிக்ஞைகளை சரியாக அடையாளம் காண்பதும், அதற்கு உடனடியாக செயல்படவும் முடியாது. இதனால் நோய் அறிகுறிகளை கண்டுபிடிப்பது முதல், இயல்பான வாழ்க்கையில் மந்தமாக செயல்படுவது என சிறியதும் பெரியதுமாக பல பிரச்சனைகள் ஏற்படும்.


ஊட்டச்சத்து குறைபாடும் நரம்பு மண்டலத்தை பலவீனமாக்குகின்றன. நரம்புகள் சீராக இயங்க, நாம் நமது தினசரி உணவில் 10 முக்கிய விஷயங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.


மெக்னீசியம்
சிக்னல்கள் மூளையை சரியாக சென்று சேர அடைய உதவும் மெக்னீஷியம், தசை தளர்வு மற்றும் தூக்கத்தை ஊக்குவிக்கிறது. இதனால் நரம்புகள் தளர்வடைகின்றன. மெக்னீஷியம் சத்து உள்ள பச்சை இலைக் காய்கறிகள், கொட்டைகள், விதைகள், வெண்ணெய் மற்றும் முழு தானியங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


கால்சியம்
இது மூளை செல்களுக்கு இடையேயான தொடர்பை கட்டுப்படுத்த உதவும் கால்சியம் பால் பொருட்கள், பச்சை இலைக் காய்கறிகள், டோஃபு மற்றும் பாதாம் என பல உணவுகளில் உள்ளன.  


மேலும் படிக்க | நீரிழிவு நோயாளியா நீங்கள்? கல்லீரல் பாதிப்பிற்கு அதிக வாய்ப்பு.... உஷார்!!


வைட்டமின் பி12
நரம்புகளைச் சுற்றியுள்ள அடுக்கை உருவாக்கி அவற்றைப் பாதுகாக்க வைட்டமின் பி12 அவசியமானது. இது மூளைக்கு ஆக்ஸிஜனை வழங்கும் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. இறைச்சி, மீன், முட்டை, பால் பொருட்கள், முழு தானியங்கள் போன்றவற்றில் மிகுதியாகக் காணப்படுகிறது. வைட்டமின் பி 12 ஐ உடல் உறிஞ்சுவதற்கு வைட்டமின் பி 6 உதவுகிறது.


வைட்டமின் டி
மூளை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும் வைட்டமின் டி, மீன், முட்டையின் மஞ்சள் கரு, காளான், பால் பொருட்கள் போன்றவற்றில் போதுமான அளவு உள்ளது. காலை சூரிய ஒளியிலும் இந்த விட்டமின் அதிகம் உள்ளது.  


ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
மூளை செல்களின் சவ்வுகளில் ஒரு முக்கிய அங்கமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. கொழுப்பு நிறைந்த மீன், அக்ரூட் பருப்புகள், சியா விதைகள், ஆளிவிதைகள் போன்றவற்றில் இந்த ஆரோக்கியமான கொழுப்புச் சத்து காணப்படுகிறது.


துத்தநாகம்
மூளையின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமான துத்தநாகம், கடல் உணவுகள், பீன்ஸ், பருப்புகள், விதைகள் போன்றவற்றில் நிறைந்துள்ளது.


வைட்டமின் சி
ஆக்ஸிஜனேற்றியாக செயல்படும் வைட்டமின் சி, ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து மூளையைப் பாதுகாக்கிறது. சிட்ரஸ் பழங்கள், தக்காளி, ப்ரோக்கோலி, கேப்சிகம் போன்றவை வைட்டமின் சியின் நல்ல ஆதாரங்கள். இவற்றை உங்கள் உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | 40 வயசு பெண்ணா? 20 வயசு அழகியா மாற இந்த கால்சியம் உணவுகளை சேர்த்துக்கோங்க!


வைட்டமின் ஈ
ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படும் வைட்டமின் ஈ, மூளை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. கொட்டைகள், விதைகள், நெய், பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின் ஈ அதிகமாக இருக்கிறது.


ஃபோலேட்
இரத்த சிவப்பணுக்கள் உருவாகவும், மூளைக்கு ஆக்ஸிஜனை வழங்கவும் உதவும் ஃபோலேட், நரம்பு மண்டலம் சரியாக இயங்க உதவுகிறது. உங்கள் உணவில் ஃபோலேட் அதிகமாக உள்ள பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை தவறாமல் சேர்த்துக் கொள்வது நல்லது.


தண்ணீர்
நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் தண்ணீர், நரம்புகள், எலும்புகள் மற்றும் இணைப்பு திசுக்களுக்கு அவசியமானது. உங்கள் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாகவும், உடலை நீரேற்றமாகவும் வைத்திருக்க போதுமான அளவு நீர் பருகுவது அவசியம் ஆகும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Adulteration: அதிர வைக்கும் உப்பு கலப்பட செய்திகள்! கலப்பட உப்பை கண்டறிவது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ