காலை உணவிற்கு பொங்கல் என்னும் சூப்பர்ஃபுட்... வியக்க வைக்கும் 5 நன்மைகள்
பொங்கல் அல்லது கிச்சடி என்பது இந்தியாவின் கிட்டத்தட்ட எல்லா பகுதியிலும் உண்ணப்படும் ஒரு ஆரோக்கியமான உணவாகும். சுவையாகவும் அதே சமயத்தில் நொடியில் தயாரிக்கக் கூடியதாகவும் இருக்கும் கிச்சடி, ஒரு சூப்பர்ஃபுட் போன்றது.
பொங்கல் அல்லது கிச்சடி என்பது இந்தியாவின் கிட்டத்தட்ட எல்லா பகுதியிலும் உண்ணப்படும் ஒரு ஆரோக்கியமான உணவாகும். சுவையாகவும் அதே சமயத்தில் நொடியில் தயாரிக்கக் கூடியதாகவும் இருக்கும் கிச்சடி, ஒரு சூப்பர்ஃபுட் போன்றது. ஏனெனில், உங்கள் ஆரோக்கியத்திற்கும் பல வழிகளில் நன்மை பயக்கும். அதை தயாரிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை மற்றும் பெரும்பாலான நிபுணர்கள் அதன் நுகர்வு பரிந்துரைக்கின்றனர், ஏனெனில் இது பல பெரிய நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
கிச்சடி சத்துக்கள் நிறைந்தது
கிச்சடியின் சிறப்பு என்னவென்றால், அதை செய்வது மிகவும் எளிதானது. பொதுவாக பொங்கல் அல்லது கிச்சடி பருப்பு மற்றும் அரிசி சேர்த்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் நீங்கள் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்காக காய்கறிகள் மற்றும் நெய்யையும் சேர்க்கலாம். அல்லது காய்கறிகள் சேர்த்து சமைத்த சாம்பார் மற்றும் சட்னியுடன் சாப்பிடலாம். காலை உணவிற்கும் பொங்கல் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும் ஏனெனில் பொங்கல் ஜீரணிக்க எளிதானது. நாள் முழுவதற்கும் தேவையான ஆற்றலும் கிடைக்கும்.
அரிசிக்கு பதிலாக சிறுதானியங்களை சேர்த்தும் பொங்கல் செய்யலாம். இது உடல் எடையை குறைக்க நிலனைப்பவர்களுக்கும் (Weight Loss Tips) நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த தேர்வாக இருக்கும். எனவே பொங்கல் சாப்பிடுவது ஆரோக்கியமான விருப்பமாக கருதப்படுகிறது. இதில் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, உங்கள் உடலுக்கு நன்மை செய்யும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளிட்ட சீரான மேக்ரோநியூட்ரியண்ட்கள் உள்ளன.
பொங்கல் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகள்
1. செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும்
ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ் இது குறித்து கூறுகையில்,, கிச்சடி என்பது எளிதில் ஜீரணமாகும் உணவு. பல பொருட்களை சாப்பிடுவது குடல் சுவர்களை பாதுகாப்பதோடு, அதில் ஏற்படும் எரிச்சம் உணர்வை போக்குகிறது. ஜீரண கோளாறு அல்லது செரிமான பிரச்சனைகள் இருக்கும் போது, பொங்கல் சாப்பிடுவது பாதுகாப்பானது. ஏனெனில், இது ஒரு லேசான உணவு, எனவே அதன் நுகர்வு உங்களுக்கு நன்மை பயக்கும்.
2. உடலை டீடாக்ஸ் செய்யும் சிறந்த உணவு
பொங்கல் சாப்பிட்டால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும். ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மற்றும் பிற காரணங்களால் உடலில் நச்சுக்கள் சேரும். உடலில் சேரும் நச்சு நீக்க பொங்கல் அல்லது கிச்சடி சாப்பிடலாம்.
மேலும் படிக்க | கெட்ட கொழுப்புகள் குறையும்... இந்த 7 சட்னிகளை உணவில் சேருங்கள்!
3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்
கிச்சடி சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது என ஆயுவேதத்தில் கூறப்பட்டுள்ளது. இது உங்கள் உடலில் உள்ள ஆற்றலை சமன் செய்கிறது. கிச்சடி வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று தோஷங்களையும் சமநிலைப்படுத்தும் திறன் கொண்டது.
4. உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்
பொங்கலில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவு. இது உடல் எடையை குறைக்க உதவும். அதிக நார்ச்சத்து இருப்பதால், கிச்சடி சாப்பிட்டால், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். எனவேம, உடல் பருமனைக் குறைக்க விரும்பினால், கண்டிப்பாக கிச்சடியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
5. சர்க்கரை நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட பொங்கல்
அரசிக்கு பதிலாக சிறுதானியங்களான, சாமை, வரகரசி, குதிரவாலி கொண்டு தயாரிக்கப்பட்ட கிச்சடியை சாப்பிடுவது நீரிழிவு நோயைத் தடுக்க உதவுகிறது. இது உடலில் இன்சுலின் அளவை பராமரிக்க உதவுகிறது. இதன் நுகர்வு நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்க்ரை அளவை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நுரையீரல் அழுக்குகளை சுத்தம் செய்வது எப்படி? சரியான ஜூஸ் குடிச்சா போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ