உடல் எடையை குறைக்க ஆண், பெண் என இருபாலரும் பலவிதமான டயட் முறைகள், பலவிதமான உடற்பயிற்சிகள் என பலமுறைகளை கையாண்டு வருகின்றனர்.  எடைகுறைப்பிற்கு முறையான டயட் மற்றும் உடற்பயிற்சி மட்டும் போதுமா என்றால் போதாது என்பது தான், எல்லாவற்றையும் விட முக்கியமானது முறையான தூக்கம்.  சரியான தூக்கம் ஒருவரது உடல் எடை குறைப்பிற்கு உதவுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.  நமது மூளைக்கு ஊட்டச்சத்து அழிப்பது முறையான தூக்கம் தான், உடல் எடையை குறைக்க உணவு கட்டுப்படும், உடற்பயிற்சியும் எவ்வவளவு முக்கியமோ அதே அளவு முறையான தூக்கமும் முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | உடல் எடை வேகமாக குறைக்க இந்த மூலிகை தண்ணீரை குடிங்க


தூக்கத்தை தவிர்ப்பது நிச்சயம் உடல் எடையை அதிகரிக்க செய்யும்.  முறையற்ற தூக்கம் உடலிலுள்ள கார்டிசோல் ஹார்மோனில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  சரியாக தூங்காமல் இருந்தால் இந்த ஹார்மோன், மன அழுத்தத்திற்கான ஹார்மோனையும், பசி உணர்வையும் ஏற்படுத்துகிறது.  உடலின் கார்போஹைட்ரேட் வளர்ச்சிதை மாற்றத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கிறது, இது இன்சுலின் அளவு மற்றும் உடலில் கொழுப்பு சேர்வதை அதிகரிக்கிறது.  மேலும் உடலிலுள்ள லெப்டினின் அளவை குறைப்பதால் உடல் கார்போஹைட்ரேட்டை தேடுகிறது.



தூக்கமின்மை வளர்ச்சி ஹார்மோனின் அளவைக் குறைக்கிறது,  ஒருவர் சரியாக தூங்கவில்லை எனில் அவருக்கு பசியுணர்வு அதிகமாக இருக்கும், இதன் காரணத்தால் அவர் அதிகமான கலோரிகளை உட்கொள்ளுவார்கள்.  மேலும் இது உடல் செயல்பட்டை குறைப்பதாலும் உடல் எடை குறையாமல் அதிகரிக்க தொடங்குகிறது.  ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு மணிநேரம் தொடர்ந்து தூங்குவது எடை கட்டுப்பாடு மற்றும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.  மேலும் சிறந்த தூக்கத்தை பெற நீங்கள் தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் நீல ஒளியை தவிர்க்க வேண்டும், சில தியானங்களை செய்துவிட்டு படுத்தால் நல்ல தூக்கம் வரும்.


மேலும் படிக்க | என்றும் இளமை எதிலும் புதுமை என்பவரா நீங்கள்? இளநீர் இருந்தால் எதுவும் சாத்தியமே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR