உடல் எடை குறிக்கும் டிப்ஸ்: உடல் பருமன் இன்று ஒரு மாபெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இந்த பிரச்சனையால் கோடிக்கணக்கான மக்கள் சிரமப்படுகின்றனர். சொல்லப்போனால் இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், சரியான உணவுப் பழக்கம் இல்லாததும், நீண்ட நேரத்துக்கு உடலை எந்த வித நடவடிக்கையும் இல்லாமல்  வைத்திருப்பதும்தான் உடல் பருமனுக்கு முக்கியக் காரணம். ஆனால் உடல் பருமன் என்பது ஒரு நோய் மட்டுமல்ல, இதன் காரணமாக இன்னும் பல ஆபத்தான நோய்களும் உங்களை வந்தடையலாம். ஆகையால் எடையைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் பருமன் என்பது இன்றைய காலத்தின் பொதுவான பிரச்சனையாக உள்ளது. இது மாறிவரும் வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் மன அழுத்தம் காரணமாக அதிகரித்து வருகிறது. அதனால் தான் உடல் எடையை குறைக்கவும், உடல் எடையை பராமரிக்கவும் மக்கள் பல வித முயற்சிகளை செய்கிறார்கள். ஆனால் பல முயற்சிகளுக்கு பெரிதாக பலன் எதுவும் இருப்பதில்லை. பலமுறை சரியான வழிமுறை பற்றி அறியாததால் பலர் உடல் எடையை குறைக்க முடியாமல் தவிக்கிறார்கள். கடுமையான முயற்சிகளுக்கு பதிலாக சில எளிய இயற்கையான வழிகளை பின்பற்றினாலே உடல் எடையை குறைக்க முடியும். அப்படிப்பட்ட வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.


இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள சில உணவுப் பொருட்களை உணவில் சரியாகச் சேர்த்துக்கொண்டால், உடல் எடையை குறைப்பது எளிதாகிவிடும். இந்த விஷயங்கள் உங்கள் உடலில் தேங்கியுள்ள கூடுதல் கொழுப்பைக் குறைக்கும். மேலும் மெலிதான இடுப்பை பெற வேண்டும் என்ற பலரது கனவும் நிஜமாகும். 


எடை இழப்புக்கான உறுதியான உணவுகள்


அவல்


அவல் மிகவும் பொதுவான இந்திய சிற்றுண்டியாகும். இது குறைந்த கலோரி கொண்டது. இதை ஆரோக்கியமான காலை உணவாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் அதை குறைந்த அளவில் உட்கொண்டால், அது எடையைக் குறைக்க உதவுகிறது. அதன் உதவியுடன், உங்கள் கொழுப்பு விரைவாக எரியத் தொடங்குகிறது.


பனீர் 


பனீர் என்பது அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவாகும். மறுபுறம், பனீரில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது. எனவே, இதை உட்கொள்வதன் மூலம், உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் இருக்கும். இதன் காரணமாக நீங்கள் கூடுதலாக சாப்பிடுவதைத் தவிர்க்கிறீர்கள். எனவே நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், பனீர் உங்களுக்கு சிறந்த ஒரு சிற்றுண்டியாக இருக்கும்.


மேலும் படிக்க | காலை முதல் இரவு வரை... கொழுப்பை எரிக்கும் புரதம் நிறைந்த ‘சில’ உணவுகள்!


கேரட்


கேரட்டில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. ஆகையால்தான் கேரட்டை உட்கொண்டாலும், நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருப்பதால், விரைவில் பசி எடுக்காது. மறுபுறம், கேரட் குறைந்த கலோரி உணவு. ஆகையால் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது கண்டிப்பாக கேரட்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


முட்டைக்கோஸ்


முட்டைக்கோஸ் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகளை கொண்டுள்ளது. இதை உட்கொள்வதால், உடல் எடை குறைவது மட்டுமல்லாமல், உங்கள் குடல்களின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். உங்கள் உணவில் முட்டைக்கோஸை ஜூஸ், சூப், வேகவைத்து கறியாக அல்லது சாட் ஆகிய வடிவங்களில் உட்கொள்ளலாம். இது உங்கள் எடையை எளிதாகக் குறைக்கும்.


கருப்பு மிளகு


கருப்பு மிளகு உட்கொள்வது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இது விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது. ஆகையால் எடையை குறைக்க விருப்பம் கொண்டவர்கள் உணவில் கண்டிப்பாக கருப்பு மிளகை சேர்த்துக்கொள்ளுங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | நரை முடிக்கு இனி இதெல்லாம் தேவையில்லை, இந்த ஆயுர்வேத வைத்தியம் ஒன்று போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ