உடல் எடையை உடனே குறைக்க சூப்பரான ரெசிபி: மோரை இப்படி குடிங்க போதும்

Weight Loss With Buttermilk: நாம் தினசரி உட்கொள்ளும் பானமான மோர் மூலம், உடல் எடையை எளிதாகக் குறைக்கலாம். இதை எப்படி செய்வது என இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 19, 2023, 06:29 AM IST
  • ஆளி விதை மோர் குடிப்பதற்கு முன், அதன் விதைகளை வறுத்து பொடியை தயார் செய்து கொள்ளவும்.
  • இதன் விதைகளை மோரில் கலந்து குடித்து வர, உடலில் வளர்சிதை மாற்றம் துரிதப்படும்.
  • மேலும் கொழுப்பை செரிக்கவும் இது உதவுகிறது.
உடல் எடையை உடனே குறைக்க சூப்பரான ரெசிபி: மோரை இப்படி குடிங்க போதும் title=

வீட்டிலேயே உடல் எடையை குறைக்க எளிய குறிப்புகள்: பெரும்பாலான மக்கள் எடை அதிகரிப்பால் மிகவும் சிரமப்படுகிறார்கள். எடை அதிகரிப்பதற்கு உங்கள் உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு. அதிகரிக்கும் எடையை குறைப்பது அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. உடலில் உள்ள கொழுப்பை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறோம். 

எடை இழப்பு குறிப்புகள்

உடல் எடையை குறைப்பது எளிதான காரியம் அல்ல. உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சிகளுடன், உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உடல் எடையைக் குறைக்க, ஜிம், யோகா, உணவுக் கட்டுப்பாடு என அனைத்தையும் நாம் செய்கிறோம். கடின உழைப்பு மற்றும் கண்டிப்பான வழக்கத்தை கடைபிடித்து உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறோம். ஆனால், எடை குறைந்த பின்னர் இந்த கண்டிப்புகள் மீண்டும் தளர்ந்து விடுகின்றன. அதன் பின்னர் மீண்டும் எடை அதிகரிக்கத் தொடங்குகிறது. 

சில சமயங்களில் ஆரோக்கியமான உணவு மற்றும் குறைந்த கலோரி உட்கொள்ளல் இருந்தாலும் உடல் எடை குறைவதில்லை. ஆனால், சில எளிய இயற்கையான வழிகள் மூலமும் உடல் எடையை சீராக குறைக்க முடியும். அப்படி ஒரு இயற்கையான எடை குறைப்பு வழிமுறை பற்றி இந்த பதிவில் காணலாம். நாம் தினசரி உட்கொள்ளும் பானமான மோர் மூலம், உடல் எடையை எளிதாகக் குறைக்கலாம். இதை எப்படி செய்வது என இந்த பதிவில் காணலாம். 

சியா விதைகளுடன் மோர்

சியா விதைகள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் சத்தான விதைகளாகக் கருதப்படுகின்றன. சியா விதைகளில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இதில் உள்ள ஜெல் கலவை நம் உடலில் உள்ள கொழுப்பை நீக்கும். சியா விதைகளை மோரில் கலந்து குடிக்கலாம். எடையை குறைக்க விரும்பம் கொண்டவர்களுக்கு மோரில் சியா விதைகளை கலந்து உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றது. 

மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகை மெருகூட்டும் பலாப்பழத்துடன் போட்டி போட வேறு பழம் உண்டா?

ஷிகன்ஜி மோர்

இதற்கு முதலில் ஷிகன்ஜி தயார் செய்துகொள்ள வேண்டும். ஷிகன்ஜி வட மாநிலங்களில் மிக பிரபலமான பானமாகும். இதற்கு முழு மல்லி விதைகள், சீரகம் மற்றும் முழு கருப்பு மிளகு போன்ற சில தினசரி முழு மசாலாப் பொருட்களை வறுத்து அரைக்க வேண்டும். இதனுடன் சாட் மசாலா, கருப்பு உப்பு ஆகியவற்றை கலக்க வேண்டும். கருப்பு உப்பு இந்த பானத்திற்கு மிகவும் இயற்கையான சுவையை அளிக்கிறது. இது வழக்கமான உப்பிலிருந்து மிகவும் வித்தியாசமானது. இந்த மசாலா பொடியுடன் சிறிது உலர்ந்த இஞ்சி பொடியையும் சேர்க்கலாம். இந்த அனைத்து பொருட்களையும் அரைத்து அதை எலுமிச்சை சாற்றில் கலக்க வேண்டும்.

பின்னர் இதை மோரில் கலந்து குடிக்கவும். ஷிகன்ஜி மோர் உடல் கொழுப்பை எரிக்க சிறந்த வழியாகும். ஷிகன்ஜி மோர் நமது வயிற்றின் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த மோர் நம் வயிற்றை நிரம்பிய உணர்வுடன் இருக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. 

ஆளி விதைக மோர்

ஆளி விதையின் மோர் குடிப்பதற்கு முன், அதன் விதைகளை வறுத்து பொடியை தயார் செய்து கொள்ளவும். இதன் விதைகளை மோரில் கலந்து குடித்து வர, உடலில் வளர்சிதை மாற்றம் துரிதப்படும். மேலும் கொழுப்பை செரிக்கவும் இது உதவுகிறது. ஆளி விதையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடலில் தேங்கி இருக்கும் கொழுப்பை எரிக்கிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் இருக்கா? கவலையே வேண்டாம்! இந்த டிப்ஸை டிரை செய்து பாருங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News