Gut Health: நமது உடலில் 5 டிரில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை குடலில் மட்டுமே உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? குடல் மனித உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும். உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டுமானால், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிப்பது அவசியம். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க குடலின் பங்கு மிகவும் முக்கியமானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடலுக்கு போதுமான அளவு ஆற்றலை வழங்குவது முதல் ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்துவது வரை, குடலி பங்களிப்பு கணிசமானது. நாம் அறியாமல் செய்யும் சில தவறுகளும், பல பழக்கவழக்கங்களும் குடலின் ஆரோக்கியத்திற்கு எதிரியாகின்றன.  


குடலுக்கு தீங்கு விளைவிக்கும் 5 ஆபத்தான பழக்கங்கள்
உங்கள் வயிற்றை முற்றிலும் சேதப்படுத்தும் மற்றும் உங்கள் குடல் ஆரோக்கியத்தை சமரசம் செய்யும் 5 ஆரோக்கியமற்ற பழக்கங்கள் என்ன என்பதை தெரிந்தால் உங்களுக்கும் அதிர்ச்சியாக இருக்கும்.


மேலும் படிக்க | குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்து கொள்ளவும்


முறையாக உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது
தொடர்ந்து உடற்பயிறி செய்யாமல் இருப்பது பல ஆரோக்கிய கேடுகளைக் கொண்டு வந்து சேர்க்கும். உடற் பயிற்சி செய்தால், நமது மன அழுத்த அளவு குறையும், நாள்பட்ட நோய் அபாயம் நீங்கும். ஆய்வுகளின்படி, தினமும் உடற்பயிற்சி செய்வது குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்க உதவுகிறது, இதனால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.  


தூக்கம் இல்லாமை
உங்கள் உடலுக்கு போதுமான அளவு தூக்கம் கொடுக்காவிட்டால், அது பல வழிகளில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். தூக்கமின்மையின் மோசமான பக்க விளைவுகளில் ஒன்று குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது ஆகும்.


சரியாக தூங்காதபோது, ​​​​உடல் கடிகாரம் சீர்குலைகிறது. இதனால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளில் குடல் பாக்டீரியாக்களிலும் ஏற்படும் பாதிப்பு முக்கியமானது.


மேலும் படிக்க | உடலில் கால்சியத்தை விரைவில் காலி செய்யும் உணவுகள்


மன அழுத்தம் மற்றும் பதற்றம்
மன அழுத்தம் மற்றும் பதற்றம் சில ஆபத்தான உடல்நல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. அவற்றில் ஒன்று மோசமான குடல் ஆரோக்கியம். அதிக அளவு மன அழுத்தம் நமது குடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையின் வளர்ச்சியைக் குறைக்கும்.


அளவுக்கு அதிகமாக மது அருந்துதல்
அதிக மது அருந்துதல் உங்கள் வயிற்றின் ஆரோக்கியத்தில் சில தீவிரமான மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம், இதனால் உங்கள் குடலும் பாதிக்கப்படலாம்!


மேலும் படிக்க | அரிசியில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?


ஊட்டச்சத்தில்லாத உணவு
போதுமான ஊட்டச்சத்துகள் இல்லாத உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். உணவில் ஊட்டச்சத்து குறைபபடு இருந்தால், அது பல உடல் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.


குடல் ஆபத்தில் உள்ளதா? எச்சரிக்கை அறிகுறிகள் 
மேலே குறிப்பிட்டுள்ள தினசரி பழக்கங்கள் உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். குடல் ஆரோக்கியம் குறையும்போது, அதற்கான அறிகுறிகளும் தோன்றத் தொடங்கும். அறிகுறிகளைக் கண்காணிப்பது, சிக்கல்களை பெரிய அளவில் தவிர்க்க உதவும். மோசமான குடல் ஆரோக்கியத்தின் அறிகுறிகள் இவை:


மேலும் படிக்க | காயாக இருந்தால் நீரிழிவுக்கு மருந்து! பழுத்தால் சர்க்கரையை அதிகரிக்கும் மாயப்பழம்


வயிற்று கோளறு
மிகுந்த சோர்வு மற்றும் பலவீனம்
ஆழ்ந்த உறக்கம் இன்மை  
சில உணவுகள் ஒத்துக் கொள்ளாமல் போவது
அதீத பசி, இனிப்பின் மீது நாட்டம்
திடீரென எடை அதிகரிப்பு அல்லது இழப்பு
சருமத்தில் எரிச்சல்


மேலும் படிக்க | அமிர்தமே நஞ்சாகும்: இது வேப்பிலை சொல்லும் தத்துவம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ