உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஏற்படும் பொதுவான தவறுகள்: இன்றைய காலத்தில் உடல் பருமன் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. உடல் பருமனால் பல வகையான நோய்கள் உங்களை சூழ்ந்து கொள்ளும். அதனால் தான் இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஃபிட்டாக இருக்க விரும்புகிறார்கள். மறுபுறம், ஒர்க்அவுட் டயட் மற்றும் உடற்பயிற்சியைப் பின்பற்றிய பிறகும், உங்கள் எடை  குறையவே இல்லை என்றால், நிச்சயமாக நீங்கள் உடற்பயிற்சியின் போது தவறு செய்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.  உடல் பருமனை குறைக்கும் போது என்னென்ன தவறுகளை தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடையை குறைக்கும் போது செய்யும் பொதுவான தவறுகள்:


ஒல்லியாக இருப்பது அல்ல, ஃபிட்டாக இருப்பது தான் முக்கியம்


எடை குறைவது என்பது சில கிலோவை குறைப்பது அல்ல. இதன் பொருள் உங்கள் குண்டான உடலை குறைக்கும் அதே நேரத்தில் ஆரோக்கியத்தில்  முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். எனவே, உடல் எடையை குறைக்கும் போது, ​​உங்களை நீங்களே வருத்திக் கொள்ளும் முறைகளை ஒரு போதும் செய்யக் கூடாது. ஏனென்றால், உங்கள் பிட்டாக இருந்தால், நீங்கள் தேவையில்லாமல் ஒல்லியாக வேண்டும் என  முயற்சிக்கக் கூடாது.


எடை இழப்பை ஒரு தண்டனையாக பார்க்க வேண்டாம்


எடை இழப்புக்கு, மக்கள் பல மணிநேரம் உடற் பயிற்சி செய்து விட்டு குறைவாக சாப்பிடுகிறார்கள். ஆனால் இது மிகவும் தவறு. ஏனென்றால், உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு இரண்டும் சீரானதாக இருக்க வேண்டும். அதனால்தான் உடல் எடையை குறைப்பதை ஒரு தண்டனையாக எடுத்துக் கொள்ளாமல் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மறுபுறம், நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், அதை உடனேயே குறைக்க வேண்டும் என முயற்சிக்காதீர்கள்.


மேலும் படிக்க | உடலின் நச்சுக்களை நீக்கும் ‘சூப்பர்’ பானம் இது தான்!


எடை இழப்பதில் அவசரம் கூடாது


உடல் எடையை இன்றே குறைக்க வேண்டும் என எண்ணக் கூடாது. ஏனெனில் அவசரத்தில் உடல் எடையை குறைக்கும் போது, ​​உங்கள் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படலாம். அதனால் தான் உடல் எடை உடனே குறைக்கவில்லை என்றால் ஏமாற்றம் அடையாமல் பொறுமையாக இருங்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Guava Leaves & Diabetes: நீரிழிவு நோயை ஓட விரட்டும் கொய்யா இலை கஷாயம்!


மேலும் படிக்க | Weight Loss: காலை உணவில் இதை சாப்பிடுங்க, சூப்பரா எடை குறையும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ