Guava Leaves & Diabetes: நீரிழிவு நோயை ஓட விரட்டும் கொய்யா இலை கஷாயம்!

கொய்யா இலைகளை கஷாயமாக்கி குடிப்பது சர்க்கரை அளவை சிறந்த முறையில் கட்டுப்படுத்துவதோடு, பல நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 15, 2022, 04:57 PM IST
  • இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த மிக சிறந்தது கொய்யா இலைகள்.
  • இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும்.
  • உடல் எடையை குறைக்க உதவும்.
Guava Leaves & Diabetes: நீரிழிவு நோயை ஓட விரட்டும் கொய்யா இலை கஷாயம்! title=

கொய்யா இலை கஷாயத்தின் நன்மைகள்: கொய்யா பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதன் இலைகளும் மிகவும் நன்மை பயக்கும். இது பல வித நோய்களுக்கு பாரம்பரிய மருத்துவமாகவும் பயன்படுத்தப்படுகிறது. கொய்யா இலைகளை கஷாயம் செய்து குடிப்பதால், உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். சர்க்கரை அளவை திறமையாக கட்டுப்படுத்தும். நீரிழிவு நோய் மட்டுமல்ல அலர்ஜி பிரச்சனையையும் நீக்கும். இது தவிர கொய்யா இலையை கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

காலையில் அருந்தும் கொய்யா இலை கஷாயம்

காலையில் வெறும் வயிற்றில் கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, இந்த நீரை உட்கொண்டால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு அற்புதமான நன்மைகளைத் தரும். கொய்யா இலைகளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன, அவை பல வைட்டமின்கள், தாதுக்கள், மைக்ரோ மற்றும் மேக்ரோநியூட்ரியன்ட்கள் நிறைந்துள்ளன. இதன் இலைகளில் பயோஆக்டிவ் எனப்படும் சேர்மங்களும் உள்ளன.

ஆரோக்கியத்தின் பொக்கிஷம்

கொய்யா இலை நூய்களை விரட்டும் மாயாஜால இலைகள் எனலாம். இவை ஆக்ஸிஜனேற்றம், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் புரதம், வைட்டமின் சி, கேலிக் அமிலம் மற்றும் பினாலிக் கலவைகள் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த மிக சிறந்தது

கொய்யா இலைகள் சுவையில் துவர்ப்பு தன்மை கொண்டது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு உயர் இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாடாக வைத்திருக்க உதவுகிறது.

இதய நோய் அபாயத்தை குறைக்கும்

கொய்யா இலையின் நீர் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வழியில், அதன் இலைகளின் கஷாயம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | மஞ்சள்-பால் அருமருந்து தான்... ஆனால் ‘இந்த’ பிரச்சனை இருந்தால் NO சொல்லவும்!

உடல் எடையை குறைக்க உதவும்

கொய்யா இலைகளின் நீர் செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அது உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது. இது கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது.

ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும்

கொய்யா இலைகளின் கஷாயம் இரத்த சோகை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது இரத்தத்தில் ஆக்ஸிஜனை அதிகரிக்கிறது. இது டெங்கு நோயாளிகளுக்கு பிளேட்லெட்டுகளை அதிகரிக்க உதவுகிறது. அத்துடன் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை பெருக்குகிறது.

வாய் புண்களுக்கு சிறந்த நிவாரணம்

உடல் சூடு காரணமாக வாய் மற்றும் நாக்கில் கொப்புளங்கள் இருந்தால். எனவே அதன் நீரால் வாய் கொப்பளித்து, குடிப்பதால் அந்த கொப்புளங்களின் எரியும் உணர்வில் நிவாரணம் கிடைக்கும்.

சருமத்திற்கு ஒரு வரப்பிரசாதம்

கொய்யா இலை கஷாயம் ஒரு இயற்கையான இரத்த சுத்திகரிப்பு மற்றும் நச்சுப் பானம் ஆகும். இது உங்கள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இதனுடன், இந்த கஷாயம் பருக்கள் மற்றும் தழும்புகளை நீக்கி, பளபளப்பான சருமத்தைப் பெற உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலானவை. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | முகத்தில் தொங்கும் சதைகள் அழகை கெடுக்கிறதா... இறுக்கமாக்க சில எளிய வழிகள்!

மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வை நீக்கி ‘மன அமைதியை’ தரும் அற்புத மூலிகைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News