எடை குறைப்பு என்று வரும்போது, ​​நமக்கு எது சரி, எது தவறு என்று நம்மை அடிக்கடி குழப்பும் பல விஷயங்கள் நம் முன்னால் இருக்கும். ஆனால், நிச்சயமாக நாம் அனைவரும் அறிந்த, நிபுணர்கள் பரிந்துரைத்த சில விஷயங்களை, சில டிப்ஸ்களை  கடைபிடிக்கும் போது நிச்சயம் உடல் பருமன் குறையும்.  இந்த சில விஷயங்களில் ஒன்று இரவு உணவுக்குப் பிறகு எடுத்துக் கொள்ளும் சில பானங்கள். நம்மில் பெரும்பாலோர் இரவில் தூக்கம் வராமல் மிகவும் சோர்வாக உணரக் கூடும். எனவே சரியான செரிமானம், நல்ல தூக்கம் மற்றும் சிறந்த எடை இழப்பு ஆகியவற்றை பெற தூங்குவதற்கு குறைந்தது இரண்டு மணி நேரம் முன்பு சாப்பிட வேண்டும். உடல் எடையை குறைக்கும் போது நீங்கள் இனிப்புகள் மற்றும் பொரித்த உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஆனால் சில சமயங்களில் நம் மீது நாம் கட்டுப்பாட்டை இழக்கிறோம். இந்த கட்டுரையில், இரவில் மட்டுமல்லாது நீங்கள் பசியுடன் இருக்கும்போது நீங்கள் குடிக்க கூடிய, கொழுப்பை எரிக்கும் 5 பானங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரீக் தயிர்  யோகர்ட் ஷேக் ( Greek Yogurt Protein Shake)


உங்கள் உடலில் அதிக தசைகள் இருந்தால், அதிக கலோரிகளை எரிக்கலாம். அதனால் தான் எடை இழப்புக்கு புரோட்டீன் இன்றியமையாத சத்தாக கருதப்படுகிறது. அதிலும், நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்து வருபவர் என்றால், தூங்கும் முன் புரோட்டீன் ஷேக் எடுப்பது உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். ஏனெனில் நீங்கள் தூங்கும் போது புரதம் தசைகளை சரி செய்து மீண்டும் உருவாக்க உதவுகிறது. 


புரோட்டீன் ஷேக் தயாரிக்கும் முறை


பாலில் டிரிப்டோபன் மற்றும் கால்சியம் உள்ளது, இது நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது. பாலில் வாட்ஸ் மற்றும் கேசீன் உள்ளிட்ட பால் புரதங்கள் உள்ளன. கேசீன் ஒரு மெதுவான-வெளியீட்டு புரதமாகும், இது நீண்ட காலத்திற்கு தசை வளர்ச்சியை ஊக்குவிக்கும். உங்கள் புரோட்டீன் ஷேக்கில் இனிக்காத பாதாம் அல்லது சோயா பாலைச் சேர்த்து, அதில் சிறிது கிரேக்க தயிர் சேர்க்கவும். இனிப்புக்காக சிறிது தேன் சேர்க்கலாம். இது உடல் பருமன் குறைய உதவும் சிறந்த பானம்


கெமோமில் டீ (Chamomile Tea)


கெமோமில் டீ நல்ல தூக்கத்தை கொடுக்கக் கூடியது என்பது அனைவருக்கும் தெரியும். இது உடலில் உள்ள கிளைசின் அளவை அதிகரிக்க உதவுகிறது.  இது ஒரு வகை நரம்பியக்கடத்தி என்று அறியப்படுகிறது. இந்த தேநீர் உங்கள் நரம்புகளை தளர்த்தி தூக்கத்தை உண்டாக்குகிறது. கெமோமில் தேநீர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவு உதவுகிறது. எடை இழப்புக்கும் உதவுகிறது. அதனால்தான் தூங்கும் முன் ஒரு சூடான கெமோமில் தேநீரை முயற்சிக்கவும்.


மேலும் படிக்க | தொப்பையை 10 நாளில் பாதியாக குறைக்கும் பிளாங்க் பயிற்சி... எளிதாக செய்யும் முறை..!


இலவங்கப்பட்டை டீ


இலவங்கப்பட்டை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. பொதுவாக இந்திய சமையலறைகளில் காணப்படும் இந்த மூலிகை, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பயன்படுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகளைக் கொண்டுள்ளதால், சிறந்த நச்சு நீக்கும் பானமாகவும் உள்ளது. இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. அதன் சுவையை அதிகரிக்க நீங்கள் தேன் சேர்க்கலாம்.


ஊறவைத்த வெந்தய தண்ணீர்


ஊறவைத்த வெந்தயம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தும். இது பொதுவாக காலையில் உட்கொள்ளப்படுகிறது, ஆனால் நீங்கள் அதை இரவிலும் உட்கொள்ளலாம். இந்த விதைகள் உடலில் வெப்பத்தை உண்டாக்கி உடல் எடையை குறைக்க உதவும். செரிமான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் அவை நன்மை பயக்கும். வெந்தயத்தை ஊற வைத்து, அதனை வெந்தயத்துடம் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


மஞ்சள் பால்


மஞ்சள் பால் குடிப்பது சளி, இருமல் மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. ஆனால் இது எடையைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில் மஞ்சள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. பாலில் கால்சியம் மற்றும் புரதம் உள்ளது, இது நல்ல தூக்கம் மற்றும் எடை இழப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.


மேலும் படிக்க |  ஒரு மாதம் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்த்தால் என்ன ஆகும்... நிபுணர்கள் கூறுவது என்ன!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ