Uric Acid இந்த வயதில் அதிரடியாய் அதிகரிக்கும்: கட்டுப்படுத்த இந்த உணவுகள் உதவும்
Uric Acid: உடல் அதிக யூரிக் அமிலத்தை உருவாக்கினால் அல்லது சிறுநீரகங்கள் அதை போதுமான அளவில் வெளியேற்றவில்லை என்றால், உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகிவிடும்.
யூரிக் அமிலம் என்பது சிறுநீரில் காணப்படும் ஒரு கழிவுப் பொருளாகும். இது அனைவரின் உடலிலும் உற்பத்தியாகிறது. யூரிக் அமிலம் சிறுநீரகங்களால் உடலில் இருந்து வடிகட்டப்படுகிறது. உடல் அதிக யூரிக் அமிலத்தை உருவாக்கினால் அல்லது சிறுநீரகங்கள் அதை போதுமான அளவில் வெளியேற்றவில்லை என்றால், உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகிவிடும். அதிகரித்த யூரிக் அமிலத்தின் நிலை ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது.
அதிகரித்த யூரிக் அமிலம் கீல்வாதம் மற்றும் சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. யூரிக் அமில அளவு 6.8 mg/dl ஐ விட அதிகமாக இருந்தால், உங்களுக்கு ஹைப்பர்யூரிசிமியா உள்ளது என்று அர்த்தம். பெண்களுக்கு சாதாரண யூரிக் அமில அளவு பொதுவாக 1.5 முதல் 6.0 mg/dl வரை இருக்கும். ஆண்களில் இதன் அளவு 2.5 முதல் 7.0 mg/dl ஆகும். யூரிக் அமிலத்தின் பெரும்பகுதி இரத்தத்தில் கரைந்து சிறுநீரகங்கள் வழியாக உடலில் இருந்து வடிகட்டப்படுகிறது.
சிறுநீரகங்களால் யூரிக் அமிலத்தை அகற்ற முடியாமல் போனால், அவை படிக வடிவில் மூட்டுகளில் குவிந்து கீல்வாதத்தை ஏற்படுத்துகின்றன. யூரிக் அமிலம் அதிகரிப்பதால் மிகவும் அதிகமான பிரச்சனை 50 வயதில் ஏற்படும். இந்த வயதில், யூரிக் அமிலத்தின் அதிகரிப்பு காரணமாக, மூட்டுகளில் வீக்கம், மூட்டு வலி, சிவத்தல், வீக்கம் மற்றும் எரிச்சல் போன்ற அவதிகள் வரலாம். இந்த வயதில், யூரிக் அமில நோயாளிகள் உணவில் பியூரின் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். 50 வயதில், உடலில் யூரிக் ஆசிட் அதிகமாக உள்ள நோயாளிகளின் உணவு என்னவாக இருக்க வேண்டும்? எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்? அனைத்தையும் இங்கு விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | Uric Acid அதிகமாக இருந்தால், அசைவ உணவு வேண்டாம்: சிறுநீரகம் செயலிழக்கும்!!
எதை தவிர்க்க வேண்டும்:
- இறைச்சி, மட்டன் கிட்னி, மட்டன் கிரேவி போன்றவற்றை தவிர்ப்பது அவசியம்.
- மத்தி, நெத்திலி, மட்டி, டுனா மீன்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது முக்கியம்.
- பீர் மற்றும் பிற போதைப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.
- சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களை தவிர்க்கவும். இதில் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் பிரக்டோஸ் உள்ளது.
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த என்ன சாப்பிட வேண்டும்
ஓட்ஸ், கோதுமை தவிடு, காளான்கள், பச்சை பட்டாணி, கீரை, அஸ்பாரகஸ், காலிஃபிளவர், கிட்னி பீன்ஸ், உலர் பட்டாணி, பருப்பு வகைகள் போன்றவற்றை அளவோடு உட்கொள்ள வேண்டும்.
யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ள உணவுகள்:
யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சில உணவுகளில் தானியங்கள், பழங்கள் மற்றும் பெரும்பாலான காய்கறிகள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், முட்டை ஆகியவை அடங்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Uric Acid அதிகரித்தால் ஜாக்கிரதை, இந்த நோய்கள் வரலாம்: நிவாரணம் பெற வழி இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ