உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் மூட்டு வலி, நிற்பதில் சிரமம், விரல்களில் வீக்கம், மூட்டுகளில் வீக்கம் மற்றும் கால் மற்றும் விரல்களில் கூச்ச உணர்வு, சோர்வு ஆகியவை ஏற்படுகின்றன. சிறுநீரகங்கள் உடலில் இருந்து யூரிக் அமிலத்தை அகற்ற முடியாமல் போகும்போது யூரிக் அமிலத்தின் அளவு அடிக்கடி உயரும். சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை அகற்ற முடியாமல் போகும் காரணிகளில், அதிகப்படியான உணவு, அதிக எடை, நீரிழிவு, டையூரிடிக்ஸ் எடுத்துக்கொள்வது மற்றும் அதிக மது அருந்துதல் ஆகியவை அடங்கும். யூரிக் அமில அளவு அதிகரிப்பது பல நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இந்த நோய்களில் முக்கியமாக கீல்வாதம், இதய நோய், சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் அடங்கும்.
யூரிக் அமிலத்தின் இயல்பான அளவு என்னவாக இருக்க வேண்டும்?
ஆண்களில் 3.4-7.0 மி.கி யூரிக் அமிலமும், பெண்களில் 2.4-6.0 மி.கி. அளவும் பாதுகாப்பான அளவாகும். உடலில் யூரிக் அமிலத்தின் அளவு உயர்ந்தால், அதைக் கட்டுப்படுத்த நீங்கள் பல வித நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
ஆப்பிள் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு இயற்கையான சுத்தப்படுத்தி மற்றும் நச்சு நீக்கியாகும். இது உடலில் இருந்து யூரிக் அமிலத்தை அகற்ற உதவுகிறது. இதில் உள்ள அமிலம் யூரிக் அமிலத்தை உடைக்கும் வேலையை செய்கிறது.
இதை எப்படி பயன்படுத்துவது:-
1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கரைக்கவும். இப்போது இந்த கரைசலை ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்கவும். யூரிக் அமிலம் கட்டுக்குள் வரும் வரை இதை தொடர்ந்து செய்யவும்.
மேலும் படிக்க | Uric Acid: யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தணுமா? தினமும் இவ்வளவு தண்ணீர் அவசியம்
எலுமிச்சை நுகர்வு
எலுமிச்சை உடலின் காரத்தன்மையை அதிகரித்து யூரிக் அமிலத்தை குறைக்கும் வேலையை செய்கிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் சி யூரிக் அமில அளவை சமப்படுத்த உதவும்.
இதை எப்படி பயன்படுத்துவது:-
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். ஒரு வாரம் உட்கொண்ட உடனேயே பயன் தெரியும்.
ஆலிவ் எண்ணெய்
யூரிக் அமிலத்தை குறைக்க ஆலிவ் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். இதில் வைட்டமின் ஈ, வைட்டமின் கே, இரும்புச்சத்து, ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவுகின்றன.
இதை எப்படி பயன்படுத்துவது:-
காய்கறிகளை சமைப்பதற்கு நெய் அல்லது பிற சமையல் எண்ணெய்க்குப் பதிலாக ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தவும்.
பேக்கிங் சோடா
யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த பேக்கிங் சோடா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதனுடன், மூட்டுவலி பிரச்சனையையும் இது நீக்குகிறது. பேகிங் சோடா உடலின் கார அளவை பராமரிக்கிறது. இது யூரிக் அமிலத்தை கரைக்கிறது.
இதை எப்படி பயன்படுத்துவது:-
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒன்று அல்லது அரை தேக்கரண்டி பேக்கிங் சோடாவை கலந்து, ஒரு நாளைக்கு 2-4 மணி நேரத்திற்கு ஒருமுறை குடிக்கவும். இப்படி இரண்டு வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால் பலன் தெரிய ஆரம்பிக்கும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் ஒரு ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. அது புரதச்சத்து நிறைந்த உணவு! புரதம் அதிகம் உள்ள உணவுகளை உண்பவரின் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு வேகமாக அதிகரிக்கிறது. எனவே, யூரிக் அமிலம் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் புரதத்தின் அளவைக் குறைத்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளத் தொடங்க வேண்டும்.
பருவகால பழங்கள், கீரை வகைகள் மற்றும் உலர் பழங்கள் ஆகியவற்றிலிருந்து இந்த நார்ச்சத்தை நீங்கள் பெறலாம். உலர் பழங்கள், குறிப்பாக பேரீச்சம்பழம் மற்றும் அக்ரூட் பருப்புகள் சாப்பிட வேண்டும். இதனால் உடலுக்கு அதிகபட்ச நார்ச்சத்து கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த இந்த பழங்களை கண்டிப்பாக உட்கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ