யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த இந்த பழங்களை கண்டிப்பாக உட்கொள்ளுங்கள்

Uric Acid Control: சில சிட்ரஸ் பழங்களை உணவில் உட்கொள்வதன் மூலம் யூரிக் அமிலத்தின் அறிகுறிகளைக் குறைக்கலாம். யூரிக் அமிலத்தை வேகமாக கட்டுப்படுத்தும் பழங்கள் எவை என்று பார்ப்போம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 1, 2022, 03:36 PM IST
  • யூரிக் அமிலம் என்பது உடலில் உற்பத்தி செய்யப்படும் ரசாயனமாகும்.
  • இது பியூரின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது அதிகரிக்கிறது.
  • யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த செர்ரி பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த இந்த பழங்களை கண்டிப்பாக உட்கொள்ளுங்கள் title=

யூரிக் அமிலம் அதிகரிப்பது இந்த நாட்களில் பலருக்கு உள்ள பிரச்சனையாக உள்ளது. இது சிறு வயதிலேயே மக்களைத் தொந்தரவு செய்யும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. யூரிக் அமிலம் என்பது உடலில் உற்பத்தி செய்யப்படும் ரசாயனமாகும். இது பியூரின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது அதிகரிக்கிறது. யூரிக் அமிலம் ஒவ்வொருவரின் உடலிலும் உருவாகிறது. இது இயற்கையான செயல்முறையாகும். சிறுநீரகம் இதை வடிகட்டி உடலில் இருந்து எளிதாக அகற்றி விடுகிறது. சிறுநீரகங்கள் உடலில் இருந்து யூரிக் அமிலத்தை அகற்றத் தவறினால், அது உடலில் சேரத் தொடங்குகிறது.

யூரிக் அமிலம் உருவாகும்போது, ​​அது மூட்டுகளில் படிகங்கள் வடிவில் குவிந்து, கீல்வாதத்தை ஏற்படுத்துகிறது. கீல்வாதம் மிகவும் வேதனையான நோயாகும். யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது, ​​அதன் அறிகுறிகள் உடலில் தெரிய ஆரம்பிக்கும். பாதங்களில் கடுமையான வலி, விரல்களில் வீக்கம் மற்றும் குத்துதல் போன்ற வலி, கை மற்றும் கால் மூட்டுகளில் வலி, கால் விரலில் குத்துதல் மற்றும் நடக்க சிரமம் ஆகியவை யூரிக் அமிலம் அதிகரித்ததற்கான அறிகுறிகளாகும்.

உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக அதை பரிசோதித்து, உணவில் கவனம் செலுத்துங்கள். சில சிட்ரஸ் பழங்களை உணவில் உட்கொள்வதன் மூலம் யூரிக் அமிலத்தின் அறிகுறிகளைக் குறைக்கலாம். யூரிக் அமிலத்தை வேகமாக கட்டுப்படுத்தும் பழங்கள் எவை என்று பார்ப்போம்.

செர்ரி

யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த செர்ரி பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த செர்ரி, யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

மேலும் படிக்க | Uric Acid அதிகரிப்பதால் அவதியா? இந்த வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும் 

ஆரஞ்சு, சாத்துகுடி ஆகியவை யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தும்:

ஆரஞ்சு, சாத்துகுடி ஆகியவை யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதில் திறம்பட செயல்படும் ஒரே இனத்தைச் சேர்ந்த பழங்கள். இந்த சிட்ரஸ் பழங்கள் அனைத்தும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, சாத்துடி ஆகியவற்றின் சாற்றை குடிப்பதாலும் நன்மை கிடைக்கும். 

கிவி யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துகிறது:

கிவி ஒரு புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்ட பழமாகும். அதை உட்கொள்வதன் மூலம் யூரிக் அமிலம் கட்டுப்படுத்தப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கிவியில் வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த இந்த பழத்தை உட்கொள்வது யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | டீ - பிரெட் ஒன்றாக சாப்பிடக்கூடாது; ஏன் தெரியுமா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News