வைட்டமின் டி என்பது கொழுப்பில் கரையக்கூடிய, நமது உடலுக்குத் தேவையான முக்கிய நுண்ணூட்டச் சத்து ஆகும். இது பொதுவாக சூரிய ஒளி, உணவு ஆதாரங்கள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் ஆகியவற்றின் மூலம் பெறலாம். பெரும்பாலான மக்களுக்கு தினசரி 600IU வைட்டமின் டி தேவைப்படுகிறது என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சூரிய ஒளியில் இருப்பது, உணவு ஆதாரங்கள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் ஆகியவற்றின் மூலம் போதுமான அளவு வைட்டமின் டி நமது உடலுக்க்குக்க் கிடைத்துவிடும். ஆனால், இது ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை மறந்துவிடக்கூடாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைட்டமின் டி
வைட்டமின் டி-இன் சில ஆதாரங்கள் மீன், முட்டையின் மஞ்சள் கரு, பால் பொருட்கள், சூரிய ஒளியில் படும் காளான்கள், ஆட்டின் கல்லீரல் மற்றும் முளைக்கட்டிய தானியங்கள் போன்ற ஆகியவற்றில் பொதிந்துள்ளது.  


சூரிய ஒளி
உடலின் வைட்டமின் டி அளவை அதிகரிப்பதில் சூரிய ஒளியின் பங்கு மிகவும் முக்கியமானது. பகலில்  சூரிய வெளிச்சத்தில் 20 நிமிடங்களுக்கு இருப்பதால்  தோராயமாக 1000IU வைட்டமின் D3 கிடைக்கும். UV-A கதிர் குறைவாக இருக்கும் போது வெயிலில் இருந்தால், நமக்கு தேவையான வைட்டமின் D கிடைத்துவிடும்.


மேலும் படிக்க | பழங்களை எந்த நேரத்தில் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது...? ஊட்டச்சத்து நிபுணர் சொல்லும் டிப்ஸ்


சூரிய வெளிச்சத்தில் UV-A கதிர்


நமக்குத் தேவையான வைட்டமின் D ஐப் பெறுவதை உறுதிசெய்வது என்பது, நமது ஆரோக்கியத்தைக் மேம்படுத்துகிறது. வைட்டமின் D3 உற்பத்திக்கு அவசியமான UV-B கதிர்களைத் தடுக்கும் என்பதால் சூரிய ஒளியில் இருக்கும்போது சன்ஸ்கிரீன் க்ரீம்களை பயன்படுத்தவேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.


ஆடை


போதுமான அளவு சூரிய வெளிச்சம் உங்கள் உடலுக்கு பெற்றுத் தருவதில் தடை ஏற்படுத்துவது நாம் அணியும் ஆடைகள். வெயில்காயும் போது, குறைந்தபட்ச ஆடைகளை அணிந்திருப்பது வைட்டமின் டி அதிகமாக உடலுக்குக் கிடைக்க உதவியாக இருக்கும். 


மேலும் படிக்க | செரிமானம் முதல் சருமம் வரை: காலையில் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்


வைட்டமின் டி & கால்சியம்


நமது குடலில் இருந்து கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துவதில் வைட்டமின் டி முக்கியமானது, எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமான கால்சியம் நமது உடலில் தங்குவதற்கு வைட்டமின் டி முக்கியமானது. வைட்டமின் டி உற்பத்தி ஒருவரின் உடலில் குறைவாக இருந்தால், அது கால்சியம்-பாஸ்பேட் ஹோமியோஸ்டாசிஸை பாதிக்கலாம்.


அது மட்டுமல்ல, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் தொடர்ச்சியான மூட்டு மற்றும் முதுகுவலியை ஏற்படுத்தும், நமது உடலின் எலும்புகளை ஆரோக்கியமாக பாதுகாப்பதற்காக வைட்டமின் டி அளவை பராமரிக்க சூரிய ஒளியில் இருப்பதை தினசரி வேலையாக மாற்றிக் கொள்ளுங்கள்.  


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சாப்பிட்டுக்கிட்டே ஜாலியா ஒல்லியாகலாம்! தொப்பையைக் குறைக்க இதைவிட ருசியான வழியே இல்ல!!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ