Weight Loss Drinks: கோடையில் இந்த பானங்களை குடித்தால், சட்டுனு எடையை குறைக்கலாம்
Weight Loss Drinks For Summer: இந்த பருவத்தில், டிடாக்ஸ் பானங்களை குடிப்பது நன்மை பயக்கும். இது தொப்பை கொழுப்பைக் கரைப்பது மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது.
கோடை காலத்தில் உடல் எடையை குறைக்கும் பானங்கள்: கோடை காலத்தில் உடலை நீரேற்றமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியம். பானங்களை குடித்தே உடல் எடையை குறைக்கலாம் என்றால், அதை விட நல்ல செய்தி இருக்க முடியாது.
இந்த பருவத்தில், டிடாக்ஸ் பானங்களை குடிப்பது நன்மை பயக்கும். இது தொப்பை கொழுப்பைக் கரைப்பது மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் இந்த பானங்கள் நச்சுகளையும் வெளியேற்றுகின்றன.
எடை இழப்புக்கு டிடாக்ஸ் பானங்கள் குடிக்கவும்
1. இலவங்கப்பட்டை மற்றும் ஆப்பிள்
இந்த பானத்தை தயாரிக்க, ஆப்பிள் சாறு மற்றும் இலவங்கப்பட்டை தூளை சேர்த்து கலக்க வேண்டும். இதை இன்னும் பயனுள்ளதாக மாற்ற விரும்பினால், ஆப்பிள் சைடர் வினிகரையும் இதனுடன் கலக்கலாம். இதை தொடர்ந்து குடித்து வந்தால், உடல் கொழுப்பு குறைக்கப்படும்.
மேலும் படிக்க | Health Care Tips: இரவில் சாதம் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா
2. பெருஞ்சீரகம், மல்லி விதை மற்றும் சீரகம்
இந்த பானத்தை தயாரிக்க, பெருஞ்சீரகம், அரை டீஸ்பூன் சீரகம் மற்றும் கொத்தமல்லி விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து இரவு முழுவதும் இருக்க விடவும். இந்த காரமான பானத்தை குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
3. இளநீர், புதினா மற்றும் எலுமிச்சை
இந்த பானத்தை தயாரிக்க, இளநீர், புதினா இலைகள், ஒரு எலுமிச்சை மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேகரிக்கவும். இளநீர் மற்றும் அதன் வழுக்கையை எடுத்து அதை வெட்டி தண்ணீரில் போடவும். இப்போது அதில் மீதமுள்ள பொருட்களைக் கலந்து குடிக்கவும். இது செரிமானத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
4. கேரட் மற்றும் ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி உள்ளது. கேரட்டில் உள்ள கலோரிகளின் அளவு மிகவும் குறைவு. இந்த இரண்டையும் கலந்து பானம் தயார் செய்து குடிக்கவும். இதனால் தொப்பை விரைவில் குறையும். இதை தயாரிக்க, 3 கேரட், 2 பெரிய ஆரஞ்சு, ஒரு ஸ்பூன் மஞ்சள், சிறிது இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து குடிக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தலவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | High cholesterol இருந்தால் என்ன ஆகும்; அறிகுறிகள் மற்றும் காரணங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR