பிளாக் காபி எஸ்பிரெசோ என்றும் அழைக்கப்படுகிறது, இனிப்பு அல்லது பால் போன்ற எந்தவித கலவையும் இல்லாமல் இது உருவாக்கப்படுகிறது.  இது வழக்கமான காபியில் இருந்து வேறுபடுகிறது, கலோரிகள் குறைவான இதன் சுவை கசப்பாக இருக்கும்.  இந்த பிளாக் காபியை அமெரிக்கா, கனடா மற்றும் சில நாடுகளில் விரும்பி அருந்துகின்றனர்.  இந்த பிளாக் காபி உடல் எடையை குறைக்க உதவுதாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது, உடல் எடையை குறைக்க விரும்பும் பலரது டயட் பட்டியலில் இந்த பிளாக் காபி இடம்பெற்ற ஆரம்பித்துள்ளது.  இதிலுள்ள அதிக அளவு காஃபின் வளர்சிதை மாற்றத்தை தூண்டவும் மற்றும் உடலிலுள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.  கனடாவில் எடை இழப்புக்கு மக்கள் பெரிதும் இந்த பிளாக் காபியையும் குடிக்கின்றனர், இதன் கசப்பு சுவை பிடிக்காதவர்கள் பிளாக் டீயில் தேன், வெல்லம் மற்றும் நட் பால் போன்றவற்றை சுவைக்காக சேர்த்துக்கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்கள் பிளாக் காபி குடிப்பதால் உங்களுக்கு பசி கட்டுப்பாட்டில் உள்ளது, இதனால் அதிகப்படியான உணவு உட்கொள்ளல் தவிர்க்கப்படுகிறது.  வயிறு நிரம்பியது போன்ற உணர்வு ஏற்படுவதால், நீங்கள் அதிக உணவை சாப்பிடமாட்டீர்கள், போதுமான உணவு உட்கொள்ளாமல் இருப்பதால் உடல் சோர்வாகிவிடக்கூடும் என்று நினைக்கவேண்டாம், பிளாக் காபி உங்களுக்கு அந்நாளுக்கான ஆரோக்கியத்தை தருகிறது.  பிளாக் காபி எடுத்துக்கொள்வது உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட நீரை இழக்க செய்வதாக கூறப்படுகிறது, தேவையற்ற நீர் குறைவதால் உங்கள் உடல் எடையும் குறையும். பிளாக் காபி குடிப்பது உங்களுக்கு நிச்சயம் பலவீனத்தை ஏற்படுத்தாது, மாறாக உற்சாகத்தை தந்து சுறுசுறுப்பாக இயங்கவைக்க உதவுகிறது.



மேலும் படிக்க | இதையெல்லாம் மட்டும் சாப்புடுங்க! எப்போதும் இளமையாக இருக்கலாம்!


மேலும் இது உங்கள் உடல் செல்களுக்கு அதிக ஆற்றலை அளிப்பதால், செல்கள் அதிக செயல்பாடுகளில் ஈடுபட்டு உடலிலுள்ள தேவையற்ற கலோரிகளை எரித்து உடலை கட்டுக்கோப்பாக வைக்கிறது.  அதே நேரம் பிளாக் காபி குடித்த பின்னர் நீங்கள் வொர்க்அவுட் செய்தால் நன்கு அதிகமாக கலோரிகள் வெளியேற்றப்படும்.  பிளாக் காபியில் குளோரோஜெனிக் அமிலம் உள்ளது, இது உடலில் குளுக்கோஸ் உற்பத்தியின் அளவைக் குறைக்கும்.  அதனால் நீரிழிவு, எடை அதிகரிப்பு மற்றும் அதிகப்படியான கலோரிகளின் பிற தீங்கு விளைவிக்கும் அபாயங்களைக் குறைக்க உதவுகிறது.  


எடை குறைப்பிற்காக பிளாக் காபி குடிப்பவர்கள் அதில் சர்க்கரை சேர்த்துக்கொள்ள கூடாது, சர்க்கரைக்குப் பதிலாக சைலிட்டால் போன்ற சர்க்கரை ஆல்கஹால், பேக்கன் சிரப் போன்ற தாவர அடிப்படையிலான இனிப்புக்களை சேர்த்துக்கொள்ளலாம்.  கர்ப்பமாக இருந்தால் அல்லது தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால் எடை இழப்புக்கு பிளாக் காபி பயன்படுத்தவேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.  அதேபோல வெறும் வயிற்றில் கருப்பு காபி குடிப்பது ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தியை அதிகரிக்கும், இதனால் வயிற்றில் புண்கள், நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படும்.  அதனால்  ஏதாவது சாப்பிட்ட பிறகு பிளாக் காபி எடுத்துக் கொள்வது நல்லது.


மேலும் படிக்க | புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் வாழைக்காய்: வாழவைக்கும் வாழை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ