இதையெல்லாம் மட்டும் சாப்புடுங்க! எப்போதும் இளமையாக இருக்கலாம்!

உங்களுக்கு தாகம் ஏற்படாமல் இருக்கும்பொழுது தண்ணீர் குடித்தால் உங்களுக்கு விரைவில் முதுமை தோற்றம் ஏற்பட்டுவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Aug 11, 2022, 06:09 AM IST
  • சருமத்தை அக்கறை எடுத்து பாதுகாக்க தற்போது பலருக்கும் நேரம் இல்லாமல் போய்விட்டது.
  • சில உணவுகளின் மூலம் வேகமாக முதுமை தோற்றம் கிடைக்கிறது.
  • பாதாம் பருப்பு, முந்திரி, வால்நட் மற்றும் கடலை போன்ற நட்ஸ் வகைகள் முதுமையை விரட்ட உதவுகிறது.
இதையெல்லாம் மட்டும் சாப்புடுங்க! எப்போதும் இளமையாக இருக்கலாம்! title=

இன்றைய நாகரிக உலகில் பலரும் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை காரணமாக சிறுவயதிலேயே முதுமையான தோற்றத்தை பெறுகின்றனர்.  சருமத்தை அக்கறை எடுத்து பாதுகாக்க தற்போது பலருக்கும் நேரம் இல்லாமல் போய்விட்டது.  முதுமை தோற்றம் என்பது தடுக்கமுடியாத ஒன்றுதான், ஆனால் அந்த முதுமை தோற்றத்தை தள்ளிப்போடக்கூடிய சக்தி நாம் சாப்பிடும் இயற்கையான பொருட்களில் இருந்து நமக்கு கிடைக்கிறது.  அத்தகைய உணவுப்பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள், ஆன்டி ஆக்சிடண்டுகள் மற்றும் புரோட்டீன்கள் போன்றவை நமது தசைகளை சுறுசுறுப்பாகி முதுமை தோற்றத்தை தடுக்க உதவுகிறது.  இப்போது முதுமை தோற்றத்தை தடுத்து நம்மை இளமையாகவும், அழகாகவும் வைக்க உதவும் இயற்கையான உணவுப்பொருட்களை பற்றி இங்கே காண்போம்.

பாதாம் பருப்பு, முந்திரி, வால்நட் மற்றும் கடலை போன்ற நட்ஸ் வகைகள் முதுமையை விரட்ட உதவுகிறது.  இதிலுள்ள நல்ல கொழுப்புகள், நார்சத்து மற்றும் புரோட்டீன் போன்றவை இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.  தண்ணீர் என்பது வாழ்க்கையின் அமிர்தமாக கருதப்படுகிறது, உடலின் உறுதிக்கு தண்ணீர் அத்தியாவசியமான ஒன்றாகும்.  அதேசமயம் உங்களுக்கு தாகம் ஏற்படாமல் இருக்கும்பொழுது தண்ணீர் குடித்தால் உங்களுக்கு விரைவில் முதுமை தோற்றம் ஏற்பட்டுவிடும்.  அதேபோல உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்கபெறாவிட்டாலும் அது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.  அதனால் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை தினமும் தவறாமல் குடிக்க வேண்டும்.  கால்சியம் நிறைந்த தயிர் உங்கள் உடலுள்ள எலும்புகளை உறுதியாக்குகிறது, தயிர் சாப்பிடுவது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

மேலும் படிக்க | முகத்தில் இந்த மாற்றங்களாம் இருக்கா? ஜாக்கிரதை வயிற்று புற்றுநோயாக இருக்கலாம்! 

ப்ரக்கோலி உங்கள் சருமத்தை நன்கு பராமரிக்கிறது.  இதில் அதிக ஊட்டச்சத்துக்கள், அதிக வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ், நார்சத்து, கால்சியம் வைட்டமின்-சி போன்றவை அதிகம் நிரம்பியுள்ளன.  ரெட் வைன் உங்கள் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுகிறது மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்கிறது என்று கூறப்படுகிறது.  ரெட் வைன் குடிப்பதன் மூலம் நமது சருமம் பளபளப்பாக இருக்கும் என்பது நெடுங்காலமாக கூறப்பட்டு வருகிறது.  சுருக்கங்களற்ற சருமத்தை பெற விரும்புபவர்கள் பப்பாளி பழத்தை சாப்பிடவேண்டும், தினமும் உங்கள் உணவில் பப்பாளி பழம் சேர்த்துக்கொள்வதன் உங்கள் சருமம் அழகாகவும், இளமையுடனும் இருக்கும்.  இதுதவிர நீங்கள் தினமும் உங்கள் உணவில் மாதுளம்பழம், ப்ளூபெர்ரி, சர்க்கரைவள்ளி கிழங்கு, அவோகேடோ, டார்க் சாக்லேட், கீரை வகைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

மேலும் படிக்க | Red Chilli: மாரடைப்பில் உயிர் காக்கும் சிவப்பு மிளகாய்! எடை இழக்கவும் உதவும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News