ஓவர் உடல் எடையால் அவதியா? இப்படி பண்ணுங்க, 7 நாட்களில் எடை குறையும்
Weight Loss: சில பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடையை குறைக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை இழப்புக்கான உணவு: இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் ஒரு நோயாக மாறி வருகிறது. உடல் பருமனால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிகை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் உடல் பருமனால் மக்கள் பல வித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். உடல் பருமன் பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. நீரிழிவு, இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் மற்றும் தைராய்டு போன்ற நோய்களுக்கு உடல் பருமன் காரணமாகும். உடல் பருமனை கட்டுப்படுத்த மக்கள் பல்வேறு வகையான முயற்சிகளை எடுக்கின்றனர்.
உடல் எடையை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். உணவு கட்டுப்பாடு, ஜிம் செல்வது, உடற்பயிற்சிகள் என பல வழிகளில் உடல் பருமனை குறைக்க முயற்சி செய்கிறார்கள். எனினும், இவற்றின் பலன் மிகச்சிலருக்குத்தான் கிடைக்கிறது. பழங்கள் மூலம் எளிதாக உடல் எடையை குறைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியும? உடல் எடையை குறைக்க உதவும் சுவையான ஒரு வழியை இந்த பதிவில் காணலாம். சில பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடையை குறைக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆப்பிள்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஆப்பிளை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும். ஆப்பிளில் நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன. இவை எடையைக் குறைக்க உதவுகின்றன.
பப்பாளி
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், காலையில் வெறும் வயிற்றில் பப்பாளியை சாப்பிடலாம். பப்பாளி எடை குறைப்பதில் மிகவும் உதவியாக இருக்கும். பப்பாளியில் நார்ச்சத்து மிக அதிக அளவில் உள்ளது. உங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், பப்பாளியை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
மேலும் படிக்க | வலுவான, பளபளப்பான கூந்தலுக்கு கறிவேப்பிலை தான் பெஸ்ட்
வாழைப்பழம்
வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஏனென்றால் வாழைப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் பல சத்துக்கள் உள்ளன.
ஆரஞ்சு
ஆரஞ்சு சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மறுபுறம், ஆரஞ்சு பழத்தை வெறும் வயிற்றில் உட்கொண்டால், எடையை எளிதாக குறைக்கலாம். ஆகையால், உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், வெறும் வயிற்றில் ஆரஞ்சு சாப்பிடலாம்.
கிவி
கிவியில் நல்ல அளவு வைட்டமின் சி உள்ளது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், வெறும் வயிற்றில் கிவி சாப்பிடுங்கள். தொடர்ந்து கிவி பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்கள உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | KOLLU: ஒல்லியாகனுமா? சர்க்கரையை கட்டுப்படுத்தனுமா? ‘இதை’ தினசரி சாப்பிட்டா போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ