நீரிழிவு மற்றும் எடை இழப்பு ஆகிய இரண்டிலும் பயனுள்ளதாக இருக்கும் கொள்ளு பெண்களுக்கும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறது. நமது தினசரி உணவில் பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்வது, உடலையும் தசைகளையும் வலுப்படுத்தும். புரதத்தின் வளமான மூலமான கொள்ளு நமக்கு ஆரோக்கியத்தை அளவில்லாமல் அள்ளிக் கொடுப்பது. இரும்புச்சத்து, பொட்டசியம் மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. கொள்ளு. சித்த வைத்தியத்திலும், ஆயுர்வேதத்தில் கொள்ளு மருந்தாகவும் பயன்படுத்தப்பகிறது.
கொள்ளு தின்றால் கொழுப்பு குறையும் என்பது பழமொழி. தென்னிந்தியாவில் அதிகம் விளையும் கொள்ளு, மிகவும் சத்து வாய்ந்தது. கொழுப்பைக் குறைப்பதில் இதன் பங்கு மிகவும் அபரிமிதமானது. இளைத்தவனுக்குக் எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு என்னும் பழமொழி, கொழுப்பை குறைக்கும் தன்மை வாய்ந்தது கொள்ளு என்பதை உணர்த்துகிறது.
அதிலும், முளைக் கட்டியக் கொள்ளுப் பயறில் மேலும் அதிக சத்துக்கள் இருப்பதால், முளை கட்டிய கொள்ளு மிகவும் நல்லது. சாப்பிடச் சொல்வார்கல். கொள்ளை முளைக் கட்டுவதால், அதில் விட்டமின் ஏ, பி மற்றும் சி அதிகரிக்கும்.
மேலும் படிக்க | Paneer: நினைவாற்றலை அதிகரிக்கும் பன்னீரை ‘இப்படி’ சாப்பிடுங்க... நிபுணர்கள் அட்வைஸ்!
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் கொள்ளு
நீரிழிவு நோயாளிகள், தங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது அவசியம். 24 சதவீதம் புரதம் கொண்ட கொள்ளு, செரிமாணமாவதற்கு அதிக நேரம் எடுக்கும் கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டது. எனவே இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகமல் இருக்க அடிக்கடி கொள்ளுப் பயறை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம் ஆகும்.
உடல் எடை குறைப்பு
உடல் எடையை குறைப்பதில் தீவிரமாக இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது கொள்ளு. அதிக புரதத்துடன், அதிக நார்ச்சத்தும் உள்ள கொள்ளு, எடையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது அடிக்கடி கொள்ளு உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, அதன் பயன் சில வாரங்களில் நிதர்சனமாகத் தெரியும்.
மேலும் படிக்க | முடி உதிர்வை தடுக்க இந்த மூலிகைகள் போதும்...எளிய வீட்டு வைத்தியம்
ஒழுங்கற்ற மாதவிடாயில் இருந்து நிவாரணம்
மாதவிடாய் ஒழுங்கற்ற நிலையில் இருப்பதால், பெண்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது, இதை தவிர்க்க, ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான வாழ்க்கை முறை அவசியம். அத்தகைய சூழ்நிலையில், கொள்ளுப் பயறு உண்பதை அதிகரித்தால், மாதவிடாய் பிரச்சனைகள் கட்டுக்குள் வரும்.
சிறுநீரக கல் பிரச்சனைத் தீர்க்கும் கொள்ளு
மிக அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொண்ட கொள்ளு, உடலில் உள்ள அழுக்குகளை எளிதில் வெளியேற்றும். எனவே, சிறுநீரகக் கற்களால் அவதிப்படுபவர்களுக்கு கொள்ளு மிகவும் நன்மையைத் தரும்.
மேலும் படிக்க | தொப்பை குறைய படுக்கைக்கு முன் இந்த உணவுகளை சாப்பிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ