ஓவரா எடை ஏறினாலும் ஒய்யாரமா குறைக்கலாம்: இந்த சூப்பர் உணவுகள் கை கொடுக்கும்
Weight Loss: குறைந்த கலோரி உணவு என்றால் நீங்கள் சாதாரண உணவை சாப்பிட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. பல ஆரோக்கியமான மற்றும் சுவையான குறைந்த கலோரி உணவுகள் உள்ளன.
உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் பிற வாழ்க்கை முறைக் கோளாறுகளைத் தவிர்க்க ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். நமது உடலுக்கு அனைத்து சத்துகளும் கண்டிப்பாக சரியான அளவில் தேவை. அதேபோல், குறைந்த அளவு கலோரி உட்கொள்ளலும் உடலுக்கு அவசியம். நாம் நாள் முழுவதும் கலோரி நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடல் தேவைக்கு அதிகமான கலோரிகளை சேமித்து வைக்கிறது. மேலும் நாள் முழுவதும் எவ்வளவு கலோரிகளை நாம் எடுத்துக்கொள்கிறோமோ அவ்வளவு கலோரிகளை நாம் எரிக்க வேண்டும். ஆனால் இதைச் செய்யாவிட்டால், கூடுதல் கலோரிகள் உடலில் கொழுப்பு வடிவில் சேமிக்கப்படும். இதன் காரணமாக உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகின்றது. அதே போல் உடல் பருமன் பல்வேறு வாழ்க்கை முறை கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
குறைந்த கலோரி உணவு என்றால் நீங்கள் சாதாரண உணவை சாப்பிட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. பல ஆரோக்கியமான மற்றும் சுவையான குறைந்த கலோரி உணவுகள் உள்ளன. அவை உங்களுக்கு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை அளிப்பதோடு அடிக்கடி பசி ஏற்படாமலும் பார்த்துக்கொள்கின்றன. அப்படிப்பட்ட 6 குறைந்த கலோரி உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
1. தயிர்
தயிர் புரதத்தின் சிறந்த மூலமாகும். இருப்பினும். அதில் சுவை சேர்த்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவைக் குறைக்கலாம். உடல் நலனுக்கு எப்போதும் தயிர் உட்கொள்வது நல்லது. தயிர் சாப்பிடுவதால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகின்றது. குறைந்த புரோட்டீன் தின்பண்டங்களுடன் ஒப்பிடும்போது, அதிக புரதம் கொண்ட தயிர் பசியைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இது நீண்ட நேரத்துக்கு உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.
மேலும் படிக்க | கொரோனாவில் இருந்து தப்பிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!
2. முட்டை
முட்டையில் மிகவும் குறைவான அளவு கலோரிகள் உள்ளன. இதில் புரதம் நிறைந்துள்ளது மற்றும் பல முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இதில் காணப்படுகின்றன. ஒருவர் எடையை இழக்க நினைத்தால், கண்டிப்பாக இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதை உட்கொண்டால் அடிக்கடி பசி எடுக்காமல் இருக்கும்.
3. சியா விதைகள்
தேசிய மருத்துவ நூலகத்தால் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, சியா விதைகளில் குறைந்த அளவு கலோரிகள் உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் இது புரதத்தின் சிறந்த மூலமாகவும் உள்ளது. இது மட்டுமின்றி, அதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, திரவத்தை உறிஞ்சும் போது உங்கள் வயிற்றை அது நிரப்புகிறது. இதனால், வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகின்றது.
4. பனீர்
பனீர் புரதத்தின் சிறந்த மூலமாகும். இது சிற்றுண்டிக்கான ஆரோக்கியமான விருப்பமாக கருதப்படுகின்றது. உடலில் போதுமான அளவு புரதம் பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதனுடன், பனீர் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது உங்களுக்கு நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவும். இதனால் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இந்த வழியில், நீங்கள் எடை அதிகரிக்காமல் குறைந்த கலோரி உணவை அனுபவிக்க முடியும்.
5. குயினோவா
குயினோவா முழுக்க முழுக்க புரதச்சத்து நிறைந்த தானியம் ஆகும். குயினோவா என்பது நம்முடைய நாட்டு சிறுதானியங்களான வரகு சாமை, தினை, குதிரைவாலி ஆகிய தானியங்களைப் போன்றது. இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் நிறைந்த குயினோவா புரதத்தின் சிறந்த மூலமாகும். இது உங்கள் வழக்கமான கலோரி தேவையை பூர்த்தி செய்ய அவசியமான குறைந்த அளவு கலோரிகளைக் கொண்டுள்ளது.
6. ஆப்பிள்
நார்ச்சத்து நிறைந்த ஆப்பிளை சாப்பிடுவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். காலை உணவில் ஆப்பிள், ஆப்பிள் ஜூஸ் ஆகியவற்றை உட்கொள்வது உங்கள் எடை இழப்பு பயணத்தை மிகவும் எளிதாக்கும். மேலும் நாள் முழுவதும் இது உங்களை சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சிக்கன் - பன்னீர் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ