எடையை குறைக்கணுமா? புரதம் நிறைந்த இந்த 3 உணவுகளை தினமும் உட்கொள்ளுங்கள்
Protein for Weight Loss: அதிக உடல் எடை காரணமாக கொலஸ்ட்ரால், அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதை கட்டுப்படுத்த கட்டாயமாக உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்,
எடை இழப்புக்கு புரதம் நிறைந்த உணவுகள்: இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. இந்தியா மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள பலர் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக அதிக கொலஸ்ட்ரால், அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதை கட்டுப்படுத்த கட்டாயமாக உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டும், இல்லையெனில் பிரச்சனை அதிகரிக்கலாம்.
புரதம்
அன்றாட உணவில் புரதத்துக்கு அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. பெண்கள் முதல் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வரை அனைவரின் உணவிலும் புரதத்தின் அளவை அதிகரிப்பது நல்லது. புரதம் உடலுக்கு பலம் கொடுத்து பலவீனத்தை நீக்குகிறது. இது தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே, தினசரி புரதத்தை சரியான அளவு உட்கொள்வது முக்கியமாகும். அதே சமயம், உடல் பருமனை தவிர்க்கவும், உடல் எடையை குறைக்கவும் தினமும் புரதத்தை சரியான அளவில் உட்கொள்வது அவசியம்.
இருப்பினும், அதிக புரத உணவுகள் என்று வரும்போதெல்லாம், இறைச்சி, கோழி அல்லது மீன் அல்லது ராஜ்மா-சோயாபீன் போன்ற அசைவ உணவுகளில் மட்டுமே புரதம் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சில புரோட்டீன் நிறைந்த உணவுகள் மட்டுமே உள்ளன என்பது இல்லை. சொல்லப்போனால், புரதங்கள் உங்களைச் சுற்றியுள்ள பல மலிவான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களிலும் இருக்கின்றன.
இந்த பதிவில், புரதம் நிறைந்த மற்றும் எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் சில உணவுகளைப் பற்றி காணலாம். புரதத்தின் நல்ல மற்றும் பயனுள்ள ஆதாரங்களாக இருக்கும் உணவுகளை பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | சட்டுனு உடல் எடையை குறைக்கனுமா? இந்த 20 நிமிட சூப்பர் வொர்கவுட் பண்ணுங்க
தயிர்
கெட்டி தயிர் புரதத்தின் இயற்கையான மற்றும் நல்ல மூலமாகும். ஒரு கப் (சுமார் 200 கிராம்) கெட்டி தயிரில் 20 கிராம் வரை புரதம் இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல், தயிரில் கொழுப்பு மற்றும் இயற்கையான சர்க்கரையும் குறைவாக உள்ளது. இதனால் நீங்கள் ஆரோக்கியமாகவும் மெலிதாகவும் இருக்க இது உதவும்.
உலர் பழங்கள்
உலர் பழங்கள் மற்றும் வால்நட்ஸ், பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தா போன்ற நட்ஸ்கள் மக்களின் அன்றாட உணவின் ஒரு பகுதியாகும். ஆனால் அவற்றை உட்கொள்வது உடல் எடையை குறைக்க வழிவகுக்கும் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்திருப்பதைத் தவிர, உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களில் நார்ச்சத்தும் உள்ளது. உலர்ந்த பழங்களை சாப்பிடுவதன் மூலமும் உடலுக்கு புரதம் கிடைக்கிறது. மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடை இழப்புக்கு உதவுகிறது
Whey Protein
தசைகளுக்கு பலம் தரும் பல வகையான அமினோ அமிலங்கள் இதில் காணப்படுகின்றன. இது எலும்பு வலிமையை அதிகரிக்கிறது, திசுக்களை புதுப்பிக்கிறது. மேலும் இது வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, இது உடலுக்கு வலிமையையும் தருகிறது. உங்கள் உணவியல் நிபுணரின் ஆலோசனையின்படி இந்த புரதத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
மேலும் படிக்க | காலை எழுந்தவுடன் இதை சாப்பிடுங்க: 6 பிரச்சனைகளில் அசத்தல் நிவாரணம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ