Diabetes Symptoms in Eyes: இன்றைய அவசர வாழ்க்கையில் பல நோய்கள் மக்களை பாடாய் படுத்தி வருகின்றன. அவற்றில் நீரிழிவு நோயும் ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக பலருக்கு சுகர் அளவு அதிகமாகின்றது. உலக அளவில் இந்தியா நீரிழிவு நோயின் தலைநகரம் என்று கூறப்படுகின்றது. இங்குதான் நீரிழிவு நோயாளிகள் அதிகம் எண்ணிக்கையில் இருக்கிறார்கள்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீரிழிவு நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக வேகமாக குறைகிறது. ஆகையால் அவர்கள் தங்கள் உணவுகளிலும், பொது ஆரோக்கியத்திலும் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கிறது. இது ஒரு தீவிர நோயாகும். 


உடலால் இன்சுலின் உற்பத்தி செய்யவோ அல்லது அதை பயன்படுத்தவோ இயலாத போது இந்த நோய் ஏற்படுகின்றது. இன்சுலின் என்றால் என்ன? இன்சுலின் ஒரு ஹார்மோன் ஆகும். இரத்த சர்க்கரை செல்களுக்குள் நுழைய இது உதவியாக இருக்கின்றது.


நீரிழிவு நோய் காரணமாக உடலின் பலவகங்கள் பாதிக்கப்படலாம். இவற்றில் கண்களும் அடங்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண்களில் பலவித மாற்றங்களும் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. சிலருக்கு இது பார்வை இழப்புக்கும் காரணமாக அமைகின்றது. கண்களில் சில மாற்றங்களை கண்டால் உடனடியாக இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்துப் பார்ப்பது நல்லது. ஃப்ரீ டயாபடிக் கட்டத்தில் இருப்பவர்களுக்கு மாற்றங்கள் தென்படலாம். இவற்றை நீரிழிவு நோய்க்கான அறிகுறியாக கொள்ள வேண்டும். நீரிழிவு நோய் இருந்தால் கண்களில் ஏற்படும் 6 ஆறு முக்கிய அறிகுறிகள் பற்றி இங்கே காணலாம்.


மங்கலான பார்வை


நீரிழிவு நோய் காரணமாக தசைகள் மற்றும் நரம்புகளில் பாதிப்பு ஏற்படக்கூடும். இதனால் பார்வை மங்கலாகும் வாய்ப்புகள் உள்ளன. மங்கலான பார்வை ஒருவருக்கு தற்காலிகமாகவும் இருக்கலாம் அல்லது நிரந்தரமாகவும் இருக்கலாம்.


கண்களில் வலி


கண்களில் திடீரென வலி ஏற்பட தொடங்கினால் அது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். இதை டயபடிஸ் ரெட்டினோபதி என்று கூறுகிறோம். இது கண்களில் உள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது.


மேலும் படிக்க | டெங்கு காய்ச்சல்: பிளேட்லெட் எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க உதவும் பழங்கள்


கண்களில் மினுமினுப்பு


கரும்புள்ளிகள் அல்லது பிரகாசமான ஒளி தோன்றுவது டயபடீஸ் விட்ரியஸ் இரத்த கசிவுக்கான அறிகுறியாக இருக்கக்கூடும். கண்களில் ஏற்படும் ஒரு வகையான இரத்த போக்காகும் இது.


உலர் கண்கள்


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண்கள் வறண்டு இருக்கும், அடிக்கடி அரிப்பு உணர்வும் ஏற்படும்.


தெளிவற்ற பார்வை 


நீரிழிவு நோய் காரணமாக பார்வை திறன் குறையலாம். இதனால் நிறங்கள் மங்கலாகவோ அல்லது தெளிவில்லாமலோ காணப்படலாம்.


கண் சோர்வு 


நீரிழிவு நோய் இருந்தால் கண்களின் தசைகள் அதிகமாகவும் கடினமாகவும் உழைக்க வேண்டி இருக்கும். இது கண்களில் சோர்வை ஏற்படுத்தி தலைவலியையும் ஏற்படுத்தக்கூடும்.


மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி அவ்வப்போது கண்களையும் சோதித்து வந்தால் இந்த பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாமல் தவிர்க்கலாம்.


மேலும் படிக்க | ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்க வேண்டும்? இதை தெரிஞ்சிக்கோங்க..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ