கீல்வாதத்தை ஏற்படுத்தும் யூரிக் அமிலத்திற்கு கல்தா கொடுக்கும் பவளமல்லி இலை
Aroma Therapy: சியாட்டிகா மற்றும் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பவளமல்லி இலைகள் சஞ்சீவினி மருந்து என்று ஆயுர்வேதம் சொல்கிறது. வலி மிகுந்த கீல்வாதத்திற்கு வலி நிவாரண வழி இது...
புதுடெல்லி: நறுமண சிகிச்சை என்பது வாசனை மூலம் நோய்களை குணப்படுத்தும் வைத்திய முறை, இதை அரோமா தெரபி என்றும் சொல்லலாம். நறுமணம் அல்லது வாசனைகளின் மூலம் உடலையும் மூளையையும் இணைத்து செய்யும் இந்த மருத்துவ முறை, மனதிலும், உடலிலும் புத்துணர்ச்சி ஏற்படுத்தி, மனதை அமைதிப்படுத்தி உடலின் வேதனைகளை போக்க வைக்கிறது. பல்வேறுவிதமான மலர்கள் அரோமா தெரபியில் பயன்படுத்தப்பட்டாலும், அதில் பாரிஜாத மலருக்கு ஒரு தனியிடம் உண்டு.
பவளமல்லி எனப்படும் பாரிஜாத மலரின் பூக்கள் மட்டுமல்லாமல் இலை, காய், கனி, விதை, பட்டை, பிசின், வேர் என அனைத்து பாகங்களுமே ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. பாரிஜாத மலரை அற்புதமான மருந்து என குறிப்பிடும் ஆயுர்வேதம், அதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற, மருத்துவ பண்புகளை பட்டியலிடுகிறது.
இந்த தனித்துவமான இலை கீல்வாதத்தின் கடுமையான வலியை ஒரே வாரத்தில் குணப்படுத்தும், இதை எவ்வாறு பயன்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்து பயன்படுத்தினால் நோயில் இருந்து விடுபடலாம். வீட்டில் துளசி செடியை வளர்ப்பது போன்று, பவளமல்லியையும் வளர்ப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது என்றால், அதற்குக் காரணம் அதன் மணமும், மருத்துவ பண்புகளும் தான்.
ஆயுர்வேதத்தில் பவளமல்லிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த மணம் பரப்பும் மலரின் இலைகள் மூட்டுவலி பிரச்சனையை போக்க பயன்படுகிறது. எந்த நோய்த்தொற்றும் உங்களை அண்டாமல் இந்த மலர் பாதுகாக்கும்.
மேலும் படிக்க | யூரிக் அமில அதிகரிப்பை தெரிந்து கொள்ள சுலப வழி! நோய் அறிகுறிகளைக் காட்டும் கால்
மூட்டுவலி பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரும் பவளமல்லி
சியாட்டிகா மற்றும் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பவளமல்லி இலைகள் சஞ்சீவினி மருந்து என்று ஆயுர்வேதம் சொல்கிறது. வலிமிகுந்த கீல்வாதத்தை உருவாக்கும் யூரிக் அமிலத்தின் தாக்கத்தை பவளமல்லியின் இலைகள் சரி செய்கின்றன. பவளமல்லி இலைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது மூட்டுவலியால் ஏற்படும் வலியைக் குறைக்கும். இது சியாட்டிகா வலியையும் பெருமளவு குறைக்கும்.
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவது அவசியம் ஆகும். நமது உடலில் இருந்து கழிவுப் பொருட்கள் வெளியேறவில்லை என்றால், உடலில் யூரிக் அமிலம் சேர்கிறது. யூரிக் அமிலம் நமது உடலில் படிந்து, படிகங்களாக மாறுகின்றன. மூட்டுக்களில் படியத் தொடங்கினால் அது கீல்வாதம் (Gout) என்று அழைக்கப்படுகிறது.
பவளமல்லியை பயன்படுத்தி யூரிக் ஆசிட் அளவை குறைப்பது எப்படி ?
பவளமல்லி இலைகளை கஷாயமாக செய்து குடிக்க வேண்டும். இந்த கசாயத்தை செய்வதும் சுலபம் தான். பவளமல்லிச் செடியின் பத்து முதல் 15 இலைகளை எடுத்து சுத்தப்படுத்திக் கொண்டு, அவற்றை தண்ணீரில் போடு நன்றாக கொதிக்க வைக்கவும். வெந்நீரை வடிகட்டி வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும். உணவு உண்பதற்கு முன்னதாக இந்த கசாயத்தைக் குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மேலும் படிக்க | யூரிக் ஆசிடை கட்டுப்படுத்தும் கிச்சன் கில்லாடி! மஞ்சளுக்கு மிஞ்சியது ஏதேனும் உண்டா?
அதேபோல, பாரிஜாத இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயில் தேங்காய் எண்ணெயைக் கலந்து, மூட்டுகளில் தேய்த்து, 15 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். மூட்டுவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
கீல்வாதத்தில் இருந்து மட்டுமல்ல, பல்வேறு சிக்கல்களையும் போக்கும் பவளமல்லி, ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆரோக்கியமானவை. இருப்பினும், இந்த கசாயம் ஏதேனும் கடுமையான பிரச்சனை இருப்பவர்களுக்கு சரியான சிகிச்சையாக இருக்குமா என்பது தெரியாது. எனவே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின்னரே இந்த கசாயத்தை பயன்படுத்த வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை காய்கள் மூலமே கட்டுப்படுத்தலாம்! கீல்வாதத்தை சரிசெய்ய காய்கனிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ