புதுடெல்லி: உங்கள் பாதங்களில் காணப்படும் இந்த அறிகுறிகளால் உங்கள் யூரிக் அமிலம் அதிகரித்திருப்பதை புரிந்து கொள்ள முடியும். யூரிக் அமிலம் என்பது ரத்ததில் சேரும் கழிவுப் பொருளாகும். உடலின் செயல்முறையில், ரத்தத்தை உருவாக்கும்போது உருவாகும் ஒரு ரசாயனம் ஆகும். ப்யூரின் என்பது டிஎன்ஏவின் கட்டுமானப் பொருளாகும், இது பல உணவுகள் மற்றும் பானங்களில் காணப்படலாம். யூரிக் அமிலம் என்பது உடலில் பியூரினை உடைக்கும்போது உற்பத்தி செய்யப்படும் இயற்கையான கழிவுப் பொருளாகும்.
யூரிக் அமிலம் பொதுவாக சிறுநீரகங்களால் உடலில் இருந்து வடிகட்டப்பட்டு சிறுநீரில் வெளியேற்றப்பட்டாலும், யூரிக் அமிலம் உடலில் அதிகரித்தால், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். யூரிக் அமிலம் என்ற சொல்லை பெரும்பாலான மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள், ஆனால் இதைப் பற்றி விரிவாக அனைவருக்கும் தெரியவில்லை. யூரிக் அமிலத்தின் அசாதாரண அளவு உணவு, மரபியல் மற்றும் சில மருத்துவ நிலைமைகள் உட்பட பல்வேறு காரணிகளால் ஏற்படலாம்.
மீன் போன்ற கடல் உணவுகளை உள்ளடக்கிய பியூரின் நிறைந்த உணவுகளை உண்பதால் யூரிக் அமிலம் உடலில் அதிகரிக்கலாம். யூரிக் அமிலத்தின அளவு அதிகரித்தால், பல ஆபத்துகள் ஏற்படும் என்றாலும், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், முடக்கு வாதம் ஆகியவை யூரிக் அமிலத்தினால் ஏற்படும் மிகவும் முக்கியமான பாதிப்பாகும்.
மேலும் படிக்க | ஹை யூரிக் ஆசிட் இருக்கா? இந்த வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்
மூட்டுகளில் யூரிக் அமிலம் படிகங்களாக படிவதால் மூட்டு பகுதிகளில் கடுமையான வலி ஏற்படுவதுடன், வீங்கிவிடும். இதயம் தொடர்பான நோய்களையும் அதிக யூரிக் அமிலம் ஏற்படுத்தும். உடலில் அதிக அளவு யூரிக் அமிலம் படிந்தால் சிறுநீரக கற்கள் உருவாகிறது.
மேலும், உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த குளுக்கோஸ், அசாதாரண கொழுப்பு அளவுகள் மற்றும் அதிகப்படியான உடல் கொழுப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் யூரிக் அமிலமானது, பக்கவாதம், நீரிழிவு மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
இந்த பிரச்சனைகளில் இரத்த சர்க்கரை அதிகரிப்பு, அதிகரித்த கொழுப்பு, தைராய்டு பிரச்சினைகள், உடல் பருமன், பலவீனமான பார்வை ஆகியவை மிகவும் முக்கியமானவை, இதன் காரணமாக மூட்டுகளில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
அதிலும் மூட்டு வலி முக்கியமாக கால்களில் உள்ள மூட்டுக்களில் ஏற்படும். இது, நடப்பதில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் யூரிக் அமில அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், முதலில் உங்கள் உணவை மாற்ற வேண்டும். அதுமட்டுமல்ல, உங்கள் அன்றாட வழக்கத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். இது தவிர, உடலில் காணப்படும் சில அறிகுறிகளை சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சை பெறுவதன் மூலம் யூரிக் அமிலம் அதிகரிப்பதை பெரிய அளவில் தடுக்கலாம்.
யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது, உடலின் பல்வேறு பகுதிகளில் பல வகையான அறிகுறிகள் தோன்றும், இதில் கால்களில் காணப்படும் அறிகுறிகளும் அடங்கும். யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது பாதங்களில் காணப்படும் அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | ஓவரா எடை ஏறினாலும் ஒய்யாரமா குறைக்கலாம்: இந்த சூப்பர் உணவுகள் கை கொடுக்கும்
கால்கள் விறைத்துப் போவது
யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது, அடிக்கடி கால்களில் விறைப்பு அல்லது பிடிப்புகள் ஏற்படும். முக்கியமாக நோயாளிகள் எழுவதற்கும் உட்காருவதற்கும் மிகவும் சிரமப்படுவார்கள். கால்களில் விறைப்புத்தன்மை ஏற்பட்டால், அதை புறக்கணிக்காமல், யூரிக் அமில அளவை ஒருமுறை சரிபார்க்க வேண்டும். அப்போது தான் சிகிச்சையை சரியான நேரத்தில் தொடங்கி, நிவாரணம் பெறலாம்.
கால்களில் வீக்கம்
அதிக யூரிக் அமிலத்தின் பிரச்சனையால், கால்களின் அனைத்து பகுதிகளிலும் கடுமையான வீக்கம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், கால்களை தரையில் வைப்பது மிகவும் கடினம். இந்த வகையான சொறி தோன்றினால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும். மேலும் கடுகு மற்றும் மஞ்சள் கலவையை உங்கள் பாதங்களில் தடவவும். இதனால் வீக்கத்தை பெருமளவு குறைக்கலாம்.
கால் நகங்கள் சிவந்துபோவது
இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது, பெருவிரல் சிவந்து போகும். காயம் ஏற்பட்டதுபோல வலித்தால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும். இரத்த பரிசோதனையையும் செய்து கொள்ளுங்கள்.
கால்விரல்களில் மாற்றம் மற்றும் கால்விரல்களில் வலி
யூரிக் அமிலம் அதிகரித்தால், கால்விரல்கள் மற்றும் கட்டைவிரல் மூட்டுகளில் கடுமையான வலி ஏற்படலாம். நடக்க முடியாமல் சிரமம் ஏற்படும். நீண்ட நாட்களாக இந்தப் பிரச்சனை இருந்தால், அலட்சியப்படுத்த வேண்டாம்.
கால்களிலும் கால்விரல்களிலும் வறட்சி
யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால், பாதங்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் வறண்டு போய்விட்டது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் கால்களை எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் இரத்த பரிசோதனையையும் செய்து கொள்ளுங்கள்.
யூரிக் அமிலம் அதிகரித்தால், உடனடியாக உங்கள் இரத்தப் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். எனவே உங்கள் சிகிச்சை சரியான நேரத்தில் தொடங்கும். மேலும், மற்ற பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தூங்குவதற்கு முன்பு பாலில் கலந்து குடிக்க வேண்டியவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ