மகள் பிறந்ததால், கோபமடைந்த ஒரு தந்தை  ​மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள ஊழியர்களை வசை பாடிய சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணா காலே என்ற அந்த நபர் மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்களிடம் மிகவும் தவறான முறையில் நடந்து கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.


புனே (Pune): மகாராஷ்டிராவில் (Maharashtra) புனே மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில், தனக்கு மகள் பிறந்ததால், சம்பந்தபட்ட அந்த நபர் தனது மனைவியைக் கொலை செய்வதாக அச்சுறுத்தியதுடன், போதை நிலையில் மருத்துவமனைக்கு சென்று,  ஆர்பாட்டம் செய்தார்.


ALSO READ |அதிர்ச்சி தகவல்... வயிற்று வலியால் தான் ஆண் என்பதை உணர்ந்த மணமான பெண்..!!!             


குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணா காலே என்ற அந்த நபர் மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்களை மிகவும் மோசமாக வசை பாடியதாகவும், ஒரு ஊழியர் அவரைத் தடுக்க முயன்றபோது, அவரை கல்லால் தாக்கியதாகவும் காவல் துறையினர் திங்களன்று தெரிவித்தனர். புனேவின் பாரமதி நகரில் உள்ள தோர்லேவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.


பாராமதி காவல் நிலையத்தின் மூத்த ஆய்வாளர் ஔதும்பர் பாட்டீல், "காலே ஜூன் 25 ஆம் தேதி மருத்துவமனைக்கு வந்து மகளை பெற்றெடுத்ததற்காக மனைவியை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டத் தொடங்கினார்"  என்று தெரிவித்தார்.


நாம் நாட்டில் பெண்களை தெய்வமாக வணங்கும் பாரம்பரியம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த நிலையில் இது போன்ற சம்பவங்கள், மனதிற்கு வருத்தத்தையும் வேதனையையும் தருகின்றன.


ALSO READ | மக்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா ...கொரோனா குறித்த WHO பரபரப்பு அறிக்கை.... !!!


மத்திய அரசு, பேட்டி பச்சாவ், பேட்டி படாவ் (Beti Bachao, Beti Padhao), அதாவது பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்று பிரச்சாரம் செய்து வருகிறது.  2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முயற்சி,  இந்தியாவில்  பெண் குழந்தைகளின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு, அது தொடர்பான  விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.